இறைவியைப்பற்றிய
ஆயிரத்தெட்டு போற்றி


1008_Thiruvilakku Pootri

 

ஆயிரத்தெட்டு போற்றி- 1 TO 100

 
1 . அங்கயற்கண் எம்பிராட்டி போற்றி போற்றி
2 . அரும்பும் இளநகை போற்றி போற்றி
3 . அண்டங்கள் ஈன்றாய் போற்றி போற்றி
4 . அலங்கல் ஓதி போற்றி போற்றி
5 . ஆரமென அணங்கே போற்றி போற்றி
6 . ஆருயிர்க் கிழத்தி போற்றி போற்றி
7 . ஆதிக்கு இறைவி போற்றி போற்றி
8 . ஆவி நாயகி போற்றி போற்றி
9 . ஆனந்த வெள்ளம் போற்றி போற்றி
10 . அறந்தழுவு நெறியே போற்றி போற்றி
11 . மீன நோக்கினாய் போற்றி போற்றி
12 . வானார் மலையான் போற்றி போற்றி
13 . வீரக் கன்னி போற்றி போற்றி
14 . பெண்களுக்கு அரசி போற்றி போற்றி
15 . பழுதறு கற்பினோய் போற்றி போற்றி
16 . வெண்ணகை உமையாள் போற்றி போற்றி
17 . ஈறிலா ஒருத்தி போற்றி போற்றி
18 . இமய மயிலே போற்றி போற்றி
19 . சேற்கண் உமையாள் போற்றி போற்றி
20 . உலகம் ஈன்றாய் போற்றி போற்றி
21 . உம்பருள் உயர்ந்தாய் போற்றி போற்றி
22 . மலர்மென் கூந்தல போற்றி போற்றி
23 . மங்கை நாயகி போற்றி போற்றி
24 . திலக நாயகி போற்றி போற்றி
25 . தடாதகைப் பூவை போற்றி போற்றி
26 . அலர்பசும் பொன்னே போற்றி போற்றி
27 . அரதன அமுதே போற்றி போற்றி
28 . பல்லுயிர் ஈன்றாய் போற்றி போற்றி
29 . பாங்குறை மங்கை போற்றி போற்றி
30 . எல்லாம் உடையாள் போற்றி போற்றி
31 . எங்கள் பெருமாட்டி போற்றி போற்றி
32 . வீடளிக்கும் அம்மை போற்றி போற்றி
33 . இகமபோகம் ஈவாய் போற்றி போற்றி
34 . மடவரல் மாதேவி போற்றி போற்றி
35 . மின்னங் கயற்கொடி போற்றி போற்றி
36 . மகரம் பிடித்த போற்றி போற்றி
37 . மீனெடுங் கண்ணி போற்றி போற்றி
38 . கரணமெலாம் கடந்தாய் போற்றி போற்றி
39 . கள்ளமில் ஒருத்தி போற்றி போற்றி
40 . பரஞான வடிவே போற்றி போற்றி
41 . பரமனிடம் பிரியாள் போற்றி போற்றி
42 . வினைக்கயிறு ஊசலாட்டும் போற்றி போற்றி
43 . வேத மயிலே போற்றி போற்றி
44 . கலைமுழு துணர்ந்தோய் போற்றி போற்றி
45 . கன்னிஎம் பிராட்டி போற்றி போற்றி
46 . தென்னவன் கன்னி போற்றி போற்றி
47 . தவவலி யுடையோய் போற்றி போற்றி
48 . கன்னியங் கயற்கண்ணி போற்றி போற்றி
49 . கனகவெற்பன் மகளே போற்றி போற்றி
50 . தீண்டுதற் கரியாய் போற்றி போற்றி
51 . திருந்துநான் மறையாள் போற்றி போற்றி
52 . திருக்காளத் தியாளே போற்றி போற்றி
53 . தென்னவன் செல்வம் போற்றி போற்றி
54 . அருள்தரும் அம்மை போற்றி போற்றி
55 . அங்கயற்கண் மடந்தை போற்றி போற்றி
56 . ஒளியால் உலகீன்றாய் போற்றி போற்றி
57 . உயிரனைத்தும் காப்பாய் போற்றி போற்றி
58 . அளியால் வளர்ப்பாய் போற்றி போற்றி
59 . ஆனந்த உருவே போற்றி போற்றி
60 . வேத முடிவே போற்றி போற்றி
61 . விளையாடும் பிராட்டி போற்றி போற்றி
62 . போதையாய் உலகின்றாய் போற்றி போற்றி
63 . பரஞானப் பூங்கோதை போற்றி போற்றி
64 . மாதா அரசே போற்றி போற்றி
65 . மதுரைப் பிராட்டி போற்றி போற்றி
66 . ஞான மூர்த்தி பெட்பே போற்றி
67 . ஞானப் பெருமகள் போற்றி போற்றி
68 . மீனவன் மகவாம் பிராட்டி போற்றி
69 . காமரு வல்லி போற்றி போற்றி
70 . கருங்கயற் கணங்கு போற்றி போற்றி
71 . சோம சேகரன் பங்கினோள் போற்றி
72 . சுந்தர வல்லி போற்றி போற்றி
73 . செழியன் செல்வி போற்றி போற்றி
74 . தென்றல் நாடன் திருமகள் போற்றி
75 . கமலமுகப் பிராட்டி போற்றி போற்றி
76 . குமரற்கு ஊட்டும் உமையே போற்றி
77 . கடலமுதப் பிராட்டி போற்றி போற்றி
78 . மதுர மொழுகிய தமிழே போற்றி
79 . பாண்டிப் பிராட்டி போற்றி போற்றி
80 . தென்னற் கொருசெல்வி போற்றி போற்றி
81 . மன்னற் கொருசெல்வி போற்றி போற்றி
82 . இன்னமுது சமைத்த அன்னாய் போற்றி
83 . தென்னன் தமிழுடன் பிறந்தாய் போற்றி
84 . கருணையின் முழுகிய கரும்பே போற்றி
85 . கலைமதி யெனவளர் கன்றே போற்றி
86 . தமிழ்மதுரைக் கரசி போற்றி போற்றி
87 . தமனிய மலைபடர் கொடியே போற்றி
88 . சங்கம் வளர்ந்திட நின்றாய் போற்றி
89 . தமிழொடு பிறந்த கொடியே போற்றி
90 . சிலையில் நெடுங்கணை தொட்டாய் போற்றி
91 . குன்றளவில் ஆளியை வென்றாய் போற்றி
92 . குதிகொளுங் கனிச்சுவைப் பெருக்கே போற்றி
93 . மழலையின் அமுதுகு கிள்ளாய் போற்றி
94 . செழுமறை தெளிய வடித்தாய் போற்றி
95 . காலங் கடந்த கடவுள் போற்றி
96 . கற்பனை கடந்த கற்பகம் போற்றி
97 . எழுதாச் சொல்லின் மழலாய் போற்றி
98 . இகபரம் முழுதும் தருவாய் போற்றி
99 . தோன்றாத் துணைக்கோர் துணையே போற்றி
100 . துவாத சாந்தம் கடந்தாய் போற்றி
   
 
 
 
 
 
 
   
Copyright © 2010 Thiruhalam.com