Article  
Mundaga Kanniamman Temple, Mylapore
Specialities : General  
x முண்டககண்ணியம்மன் சிவன், விஷ்ணு, பிரம்மா என மும்மூர்த்தி அம்சத்துடன் காட்சி தருவதாக ஐதீகம்.
அம்பாள் சன்னதிக்கு பின்புறத்தில் ஆலமரம் இருக்கிறது.

இம்மரத்திற்குள் நாக புற்றும், அருகில் நாகதேவதை சன்னதியும் இருக்கிறது. நாக தோஷம் உள்ளவர்கள் நாகதேவதைக்கு பால், பன்னீர், மஞ்சள் அபிஷேகம் செய்து, நெய்தீபம் ஏற்றி வழிபடுகிறார்கள். மூலஸ்தானத்திற்கு இடப்புறத்தில் உற்சவ அம்பாள் சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கிறாள்.

இவளுக்கு இருபுறமும் சிம்ம வாகனம் இருக்கிறது. பிரகாரத்தில் சப்த கன்னியர் லிங்கம் போன்ற அமைப்பில் காட்சி தருகின்றனர். இவர்களுக்கு இருபுறமும் ஜமதக்னி மகரிஷி மற்றும் அவரது மகன் பரசுராமர் இருவரும் காவல் தெய்வமாக இருக்கின்றனர்.

கோயில் முகப்பில் அரசமரத்தின் கீழ் விநாயகர் இருக்கிறார். நாக தோஷம் உள்ளவர்கள் இம்மரத்தின் கீழ் நாகர் பிரதிஷ்டை செய்து வேண்டிக்கொள்கிறார்கள்.

நாயன்மார்களில் வாயிலார், ஆழ்வார்களில் பேயாழ்வார் அவதரித்த தலம் இது. இக்கோயிலை சுற்றி கபாலீஸ்வரர், பார்த்தசாரதி, மாதவப்பெருமாள் ஆகிய பிரசித்தி பெற்ற பிற தலங்கள் அமைந்திருக்கிறது. முண்டக கண்ணியம்மனை தரிசிக்கச் செல்பவர்கள் இத்தலங்களையும் தரிசித்து திரும்பலாம்.

முற்காலத்தில் இத்தலத்தில் தாமரைக் குளம் ஒன்று இருந்தது. அதன் கரையிலிருந்த ஆலமரத்தின் அடியில் அம்பாள், சுயம்பு ரூபமாக எழுந்தருளினாள். பக்தர்கள் ஆரம்பத்தில் அம்பாளுக்கு ஓலைக்குடிசை வேய்ந்து சிறிய சன்னதி அமைத்தனர்.

பிற்காலத்தில் கோயில் விரிவாக கட்டப்பட்டது. ஆனாலும் அம்பிகையின் உத்தரவு கிடைக்காததால் மூலஸ்தானம் மட்டும், தற்போதும் குடிசையிலேயே இருக்கிறது.

அம்பாள், எளிமையை உணர்த்துவதாக ஓலைக்குடிசையின் கீழிருந்து அருளுவதாக சொல்கிறார்கள்.
இத்தலத்து அம்பிகையின் சுயம்பு வடிவம் தாமரை மொட்டு போன்ற வடிவில் காட்சியளிக்கிறது. எனவே இவள், "முண்டககண்ணியம்மன்' என்று அழைக்கப்படுகிறாள்.

முண்டகம் என்றால் "தாமரை' என்று பொருள். சுயம்புவின் மத்தியில் அம்பிகையின் பிரதான ஆயுதமான சூலம் இருப்பது சிறப்பான அமைப்பு.
Area :
Bus Route :
Share |
 
:
Comments  
-- You will be the First person to comment for this Article --
 
Sign up for The Second Marriage.com and start searching profiles and get married instantly.

Post Your Comment :
 
 
 
 
 
 
Copyright © 2010 Thiruhalam.com