Amritsar Temple
Specialities : General |

அமிர்தசரஸ் பொற்கோவில்
அமிர்தசரஸ் என்று சொன்ன மாத்திரத்திலேயே நம் நினைவுக்கு வருவது அங்குள்ள பொற்கோவில்தான். பொன் (தங்கம்) கொண்டு இக்கோவில் உருவாக்கப்பட்டுள்ளதால் 'பொற்கோவில்' என்கிறார்கள்.
சீக்கியர்களின் புனித தலமான இங்கு சாதி, மத, இன வேறபாடு இன்றி நாள்தோறும் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் வந்து செல்கிறார்கள். அதனால் இதை நாம் 'சமத்துவ கோவில்' என்றே சொல்லலாம்.
விருப்பமான கோவில்:- பொற்கோவிலுக்கு 'ஹர்மந்திர் சாஹிப்', 'தர்பார் சாகிப்' என்ற பெயர்களும் உண்டு. சீக்கியர்களின் ஐந்தாவது மத குருவான குரு ஹர்ஜன் சாகிப், சீக்கியர்களுக்கு என்று ஒரு பொதுவான வழிபாட்டுத் தலம் அமைக்க வேண்டும் என்று விரும்பினார். அதன் தொடர்ச்சியாக உருவானதுதான் இந்த பொற்கோவில்.
இந்த கோவில் அமைக்கப்படுவதற்கு முன்னதாகவே, அக்கோவில் அமைந்துள்ள தெப்பக்குளம் (சரோவர்) உருவாக்கப்பட்டுவிட்டது. சீக்கியர்களின் நான்காவது மத குருவான குரு ராம்தாஸ் சாகிப் காலத்தில் அந்த தெப்பக்குளம் ஏற்படுத்தப்பட்டது.
இன்றைய பொற்கோவில் குறைந்த உயரத்திலேயே நிர்மாணிக்கப்பட்டுள்ளது. கோவிலுக்குள் வரவும், வெளியே செல்லவும் ஒரே பாதையை பயன்படத்தும் வகையில் 4 வாயில்கள் நான்கு புறமும் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த நான்கு வாயில்களும் சாதி, இனம், சமய வேறுபாடின்றி, யார் வேண்டுமானாலும் வந்து செல்லலாம் என்பதை எடுத்துரைக்கும் வகையில் கட்டப்பட்டுள்ளன.
ஆண்டவனிடம் செல்லும் பாதை:- ஹர்மந்திர் சாஹிப் என்று அழைக்கப்படும் பொற்கோவில் தெப்பக் குளத்தின் மையப் பகுதியல் அமைந்துள்ளது. நான்கு திசைகளை நோக்கியும் உள்ள நுழைவாயில்கள் அழகிய கலைநயத்துடன் காணப்படுகின்றன.
பொற்கோவிலுக்குள் செல்வதற்கு என்று தெப்பக் குளத்தின் மீது பாலம் அமைத்திருக்கிறார்கள. இந்த பாலத்தை கடந்து பொற்கோவிலை அடைந்ததும், அக்கோவிலை சுற்றி வரும் வகையில் சுற்றுப்பாதையும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாதை ஆண்டவனிடம் அழைத்துச் செல்லும் படிக்கட்டாக கருதப்படுகிறது.
பொற்கோவில் மூன்று அடுக்குகளாக அமைந்துள்ளது. முன் பகுதி பாலத்தை நோக்கிய வண்ணம் அமைந்துள்ளது. முதல் தளத்தின் மேல் பகுதியில் 4 அடி உயரத்திற்கு கைப்பிடி சுவர் நான்கு பக்கமும் கட்டப்பட்டுள்ளது. நான்கு மூலைகளிலும் அமைக்கப்பட்டுள்ள மாடங்கள் சீக்கிய கட்டிடக்கலையை அழகாக பிரதிபலிக்கின்றன.
மூன்றாவது தளத்தின் மையப் பகுதியில் பிரதான பிரார்த்தனை மண்டபம் அமைந்துள்ளத. இதில், சிறிய சதுர வடிவிலான அறை மூன்று வாயில்களை கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது. இங்கு, சீக்கியர்களின் புனித நூலான 'குரு கிராந்த் சாகிப்' வாசிக்கபபட்டு வருகிறது.
இந்த கோவிலின் கட்டிடக்கலை அமைப்பை நன்கு ஆராய்ந்துப் பார்த்தால், இந்து மற்றும் இஸ்லாமிய சமயங்கள் இடையேயான இணக்கத்தை, அது எதிரொலிப்பதை உணர முடிகிறது.
பொற்கோவில் தெப்பக்குளத்தில் நீராடுவது புனிதமாக கருதப்படுவதால், அங்கு பக்தர்கள் புனித நீராடுவதையும் காண முடிகிறது.
Area : Amirthsar | Bus Route : |
:
|
|||
|
|||
|
|||
Related Temples
Copyright © 2010 Thiruhalam.com