Article  
Hanuman Temples
Specialities : Husband and Wife together  
x ஸ்ரீ ராமர் என்று சொன்னதும், சீதைக்கு அடுத்தப்படியாக நம் நினைவுக்கு வருபவர் ஆஞ்சநேயர். அனுமன், மாருதி என்று பல பெயர்களிலும் பக்தர்கள் இவரை அழைத்து மகிழ்கிறார்கள்.

பெருமாள் கோவில்களில் தனியாக எழுந்தருளி அருள்பாலிக்கும் இவருக்கு பல ஊர்களில் தனிக் கோவில்கள் அமைந்திருக்கின்றன.

அத்தகைய கோவில்களில் தனிச் சிறப்புமிக்கது 'அழியாநிலை' என்ற ஊரில் உள்ள ஆஞ்சநேயர் கோவில். இந்த ஊர், புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் இருந்து புதுக்கோட்டை செல்லும் சாலையில் 5 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

ராமபிரானை பிரிந்து இலங்கையில் அசோகவனத்தில் தனிமை வேதனையில் தவித்த அன்னை சீதாப்பிராட்டியை தேடிச் சென்ற ஆஞ்சநேயர், ராமபிரான் தன்னை அனுப்பியதாக சொல்லி, அவர் முன்னால் விஸ்வரூபத்தில் தோன்றி ராமர் கொடுத்தனுப்பிய கனையாழியை காட்டினார்.

விஸ்வரூப ஆஞ்சநேயரை பார்த்த பின்னர்தான் ராமபிரான் இலங்கை வந்து தன்னை மீட்ச் செல்வார் என்ற நம்பிக்கை சீதா பிராட்டியாருக்கு ஏற்பட்டது.

அந்த விஸ்வரூப ஆஞ்சநேயர் தான் அழியாநிலை ஊரில் 2 அடி பீடத்தின் மீது 9 அடி உயரத்தில் எழுந்தருளி அருள்பாலிக்கிறார்.

ராமபிரானும், சீதாப்பிராட்டியும் ஒன்று சேர அடித்தளம் அமைத்துக் கொடுத்தவர் ஆஞ்சநேயர்தான். ஆகையால் பிரிந்திருக்கும் கணவன்-மனைவியர் இங்குள்ள ஆஞ்சநேயரை வந்து வழிபட்டால் மீண்டும் ஒன்று சேர்வார்கள் என்று கூறுகிறார்கள்.

செல்வ விநாயகர்

இங்கு, இவரது சன்னதிக்கு அருகில் விநாயகப் பெருமானுக்கும் ஆலயம் அமைக்கப்பட்டு உள்ளது. செல்வத்தை வாரி வழங்கும் செல்வ விநாயகராக இவர் அருள் பாலிக்கிறார்.

உலகத்து உயிரினங்களையும், இந்த உலகத்தையும் படைத்துக் காக்கும் சிவபெருமானையும் விட்டு வைக்காதவர் சனி பகவான். ஆனால், நவக்கிரக நாயகி சக்தியின் வடிவமான சீதா பிராட்டியிடம் சிரஞ்சீவித் தன்மை வரம் பெற்ற ஆஞ்சநேயரை மட்டும் அவரால் நெருங்க முடியவில்லை.

தன்னை பிடிக்க வந்த சனிபகவானுக்கே ஒரு சிக்கலை ஏற்படுத்தினார் ஆஞ்சநேயர். அதாவது, அவரிடமே 'என்னை மட்டுமல்ல; என்னை வழிபடும் எந்தப் பக்தனையும் நீர் சம்பிரதாயத்திற்காக கூட பிடிக்கக் கூடாது. அந்த பக்தனை வருத்தவும் கூடாது' என்ற வாக்குறுதியை வாங்கிக் கொண்டார்.

அதனால்தான் ஆஞ்சநேயரை வழபடும் பக்தர்களுக்கு சனிபகவான் தொல்லை தரமாட்டார் என்ற ஜோதிட வல்லுநர்கள் கூறுகிறார்கள்.

சனி பகவானால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு வந்து செல்வ விநாயகரையும், விஸ்வரூப ஆஞ்சநேயரையும் வழிபட்டால் துன்பத்தின் சுமை குறையும் என்பது அனுபவ ரீதியாக பக்தர்கள் பலர் உணர்ந்த உண்மை.

குழந்தைப்பேறு கிடைக்காத பெண்கள் அழியாநிலை ஆஞ்சநேயருக்கு தங்கள் செலவில் வெண்ணெய்க் காப்பு சாத்தி, மறுநாள் அதை வாங்கி தாங்களும் சாப்பிட்டு, பிற பக்தர்களுக்கும் கொடுத்தால் குழந்தைச் செல்வம் கிடைக்கும். அதற்கு வசதி இல்லாதவர்கள் ஆஞ்சநேயருக்கு வெண்ணெய்க் காப்பு சாத்தும் நாளை அறிந்து, அப்போது இங்கு வந்து அவரை வழிபட்டு அந்த வெண்ணையை வாங்கிச் சாப்பிட்டாலே போதும். குழந்தைச் செல்வம் கிடைப்பது உறுதி என்கிறார்கள்.

இத்தகைய சிறப்புமிக்க இந்த கோவிலில் சனிக்கிழமை தோறும் அன்னதானமும், நாள் தோறம் 2 கால பூஜையும் நடைபெறுகிறது.

ஆஞ்சநேயருக்குரிய விசேஷ நாட்களில் சிறப்பு பூஜைகள், வெண்ணைக் காப்பு அலங்காரம், சந்தனக்காப்பு அலங்காரம், மஞ்சள் காப்பு அலங்காரம், விபூதி அலங்காரம், மலர் அலங்காரம் ஆகியவையும் நடைபெறுகின்றன.

வழிபாட்டால் விலகும் பிரச்சினைகள்:-

எதற்கெடுத்தாலும் சண்டை போட்டுக்கொள்ளும் கணவன்-மனைவியர் இந்த அழியாநிலை ஆஞ்சநேயரை வழிபட்டால் போதும். அவர்களது பிரச்சினைகள் சூரியன் கண்ட பனி போல் விலகிவிடும் என்று கூறுகிறார்கள்.

மேலும், கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழும் தம்பதியர் இவரை வழிபட்டு மனம் உருகி வேண்டினால் மீண்டும் ஒன்று சேர்வார்கள் என்றும் சொல்கிறார்கள்.

அத்துடன், செய்யும் தொழிலில் முன்னேற்றம் இல்லாதவர்கள், இங்கு வந்து வழிபடுவதன் மூலம் தடைகள் நீங்கி முன்னேற்றம் பெறுகிறார்கள்.

மஞ்சள் அரைத்து வழிபாடு:-

ஆஞ்சநேயரின் ஜென்ம நட்சத்திரம் மூலம். நல்ல மணமகன் அமையாமல் திருமணத் தடையால் தவிக்கும் பெண்கள் மூல நட்சத்திரத்தன்று இங்கு வந்து, அர்ச்சகர் தரும் மஞ்சளை வாங்கி, இங்குள்ள அம்மியில் அவர்கள் கையாலே அரைக்க வேண்டும்.

பின்னர், அந்த அரைத்த மஞ்சளை மீண்டும் அர்ச்சகரிடமே கொடுத்து, ஆஞ்சநேயருக்கு அதைக்கொண்டு அபிஷேகம் செய்ய வேண்டும். மறுநாளும் கோவிலுக்கு வந்து ஆஞ்சநேயருக்கு சாத்தப்பட்ட அதே மஞ்சளை அர்ச்சகரிடம் கேட்டு வாங்கிக் கொள்ள வேண்டும்.

2 அல்லது 3 முறை இந்த வேண்டுதலை கன்னிப் பெண்கள் செய்தால் அவர்களுக்கு நல்ல கணவன் அமைவது உறுதி என்று நம்புகிறார்கள்.
Area : Azhiyanilai,
Bus Route :
5kms from Aranthangi to Pudukottai
Share |
 
:
Comments  
-- You will be the First person to comment for this Article --
 
Sign up for The Second Marriage.com and start searching profiles and get married instantly.

Related Temples


Post Your Comment :
 
 
 
 
 
 
Copyright © 2010 Thiruhalam.com