Article  
En Kan Temple
Specialities : For Eye Sighting  
x தஞ்சையிலிருந்து நாகை செல்லும் பாதையில் முகுந்தனூர் என்ற ஊரின் அருகில் அமைந்துள்ளது.

இத்தலத்திற்கு பிரம்மபுரம், பாஸ்கரக்ஷேத்திரம், அஷ்ட நேந்திரபுரம் என்ற திருப்பெயர்களும் உள்ளன. கர்ப்பகிருகத்தில் முருகப்பெருமான் வள்ளி தெய்வானை சமேதராய் ஆறுமுகப் பெருமான் மயில் மீது அமர்ந்து காட்சி தருகிறார். சாலையோரமாக வளைவுடன் கூடிய நுழைவாயில் அமைக்கப்பட்டுள்ளது.

இத்தலத்திற்கு எண்கண் என்ற பெயர் பெற வரலாறு உள்ளது.

தஞ்சையை முத்தரசசோழன் என்பவன் ஆட்சி செய்து வந்தான். அவன் தன் அரசவை சிற்பியை அழைத்து திருமுருகன் சிலை ஒன்றை செய்யுமாறு உத்தரவிட்டான். அச்சிற்பியும் மன்னனின் உத்தரவை ஏற்று, ஆறுமுகங்களுடன் கூடிய சிலை ஒன்றை வடித்தான். மயில் மீது வள்ளி தெய்வானையுடன் இடது திருக்காலை மடித்து, வலக்காலை தொங்க விட்ட நிலையில் மயில் மீது அமர்ந்தபடி சிலையை வடித்தான். அழகான வேலைப்பாடுகள் உள்ள அச்சிலையை கண்ட மன்னன் வியந்து பாராட்டினான். வியந்த அம்மன்னனின் விபரீத எண்ணம் ஒன்று உருவானது.

இதுபோன்ற வேலைப்பாடுடைய சிற்பம் இதைத்தவிர வேறெங்கும் இருக்கக்கூடாது என்று நினைத்த மன்னன் அந்த அழகிய சிலை உருவாக்கிய சிற்பியின் கட்டை விரலை வெட்டி எடுத்தான். மனம் தளராத அந்த சிற்பி அதுபோன்றே இன்னொரு முருகன் சிலையை அழகாக வடித்தான். அந்த மன்னன் மேலும் வெகுண்டெழுந்தவனாய், அச்சிற்பியின் கண்களையே குருடாக்கி விட்டான். அச்சிற்பி அப்போதும் கலங்காதவனாய், தான் முன்பு செய்த மூர்த்தங்களையே எண்ணங்களையே தன் கண்களாக்கி முன்பை விட மிகவும் அற்புதமான முருகன் சிலையை வடித்தான். முருகன் அருளால் இரு கண்களையும் பெற்றான்.

எண்ணமே கண் ஆனபடியால் இத்திருத்தலம் எண் கண் என்று பெயர் பெற்றது. சிக்கல் என்ற தலமென்ற பொரவாச்சேரி கிராமத்திலும் இதே சிற்பியால் செதுக்கப்பட்ட திருமுருகனின் உருவை தரிசிக்கலாம்.

இத்தலவிருட்சம் வன்னிமரம். தீர்த்தம் காவிரி.

இத்தல முருகனை வழிபட்டால் கண் பார்வையிழந்தோரும் கண் பார்வையை மீண்டும் பெறலாம் என நம்பப்படுகிறது.
Area : Mugandanur
Bus Route :
Thanjavur to Nagapatinam route Mugandanur Village
Share |
 
:
Comments  
1ramyaOn 25/09/2010
photos
Title :
its very useful for me
2Anand V. RamanOn 19/06/2010
photos
Title :
A very useful and informative spiritual website.
 
Sign up for The Second Marriage.com and start searching profiles and get married instantly.

Post Your Comment :
 
 
 
 
 
 
Copyright © 2010 Thiruhalam.com