Article  
Samayapuram Mariamman
Specialities : For Marriage  
x மாரியம்மன் என்று சொன்னதும் நம் நினைவுக்கு வருபவள் சமயபுரம் மாரியம்மன் தான். அவளை நாமும் தரிசித்துவிட்டு வருவோமா?

திருச்சி சத்திரம் பஸ் நிலையத்தில் இருந்து சுமார் 15 கிலோ மீட்டர் தொலைவில் சென்னைக்கு செல்லும் வழியில் சமயபுரம் அமைந்துள்ளது.

இங்குள்ள மாரியம்மன் முற்காலத்தில் 'வைஷ்ணவி' என்ற நாமத்தில் ஸ்ரீரங்கத்தில் குடிகொண்டிருந்ததாக கூறுகிறார்கள். அங்கிருந்த இந்த அம்மனை வேறொரு இடத்திற்கு கொண்டு சென்ற சிலர், கண்ணனூர் என்ற இடத்தில் அம்மனை வைத்துவிட்டு சென்றுவிட்டனர். அவ்வாறு சிலை வைக்கப்பட்ட கண்ணனூர்தான் இன்றைய சமயபுரம் என்றும், அந்த அம்மன்தான் இன்றைய சமயபுரத்தம்மன் என்றும் கூறுகிறார்கள்.

படையெடுப்பு: இந்த நிலையில், தென்னாட்டின் மீது படையெடுத்து வந்த விஜய நகர மன்னர், கண்ணனூர் காட்டுப் பகுதியில் முகாமிட்டிருந்தார். அப்போது, அங்கிருந்த மாரியம்மனை வழிபட்டார். போரில் வெற்றி பெற்றால் கோவில் கட்டுவதாகவும் வேண்டிக் கொண்டார்.

அதன்படி, போரில் ஏற்பட்ட வெற்றியை அடுத்து மாரியம்மனுக்கு கோவில் எழுப்பினார். தற்போதுள்ள கோவில் கி.பி. 1804ல் விஜயரங்க சொக்கநாத நாயக்க மன்னரால் கட்டப்பட்டதாகும்.

சோழர் காலத்திலேயே இங்கு மாரியம்மன் கோவில் இருந்திருக்க வேண்டும். தற்போதுள்ள கோவில், பிந்தைய விஜயநகர மற்றும் நாயக்க மன்னர்கள் காலத்தில் சிறப்பு பெற்றிருக்க வேண்டும் என்பது ஆய்வாளர்களின் கருத்து.

சமயபுரம் கோவில் கொடி மரத்தை அடுத்துள்ள மண்டபத் தூண்களின் கீழ்ப் பகுதியில் நாயக்க மன்னர்களது உருவங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதில் இருந்து, இந்த கோவில் மிகவும் பழமை வாய்ந்தது என்பதை அறிந்து கொள்ள முடிகிறது.

சமயபுரத்தம்மனின் கருவறையைச் சுற்றி எப்போதும் நீர் நிறைந்திருக்குமாறு ஈரத் தன்மையுடன் வைத்திருக்கிறார்கள். அம்மன் எப்போதும் குளிர்ச்சியாக இருப்பதற்காக இப்படிச் செய்கிறார்கள்.

சமயபுரத்து மாரியம்மனின் விக்ரகம் மூலிகைகளால் ஆனது என்பதால் இதற்கு அபிஷேகம் செய்வதில்லை. அதற்கு பதிலாக உற்சவர் அம்மனுக்கு அபிஷேகம் செய்கிறார்கள்.

இரவில் கோவிலின் முன் மண்டபத்தில் பக்தர்கள் படுத்து உறங்குகிறார்கள். அப்போது, அர்த்த ஜாமத்தில் அம்மனின் கொலுசு சத்தம் கேட்கும் என்கிறார்கள்.

விரதம் இருக்கும் அம்மன்:- பக்தர்கள் அம்மனை வேண்டி விரதம் இருப்பதுதான் நடைமுறை. ஆனால், இங்கு பக்தர்களுக்காக அம்மனே விரதம் இருக்கிறாள். இதை 'பச்சைப் பட்டினி' விரதம் என்கிறார்கள். மாசி மாத கடைசி ஞாயிறு அன்று நடைபெறும் பூச்சொரிதல் திருவிழாவுடன் அம்மனின் இந்த விரதம் ஆரம்பிக்கிறது.

மாங்கல்யப் பலத்துக்காக சுமங்கலிப் பெண்கள் தாம்பூலம், வளையல், கண்ணாடி போன்ற மங்கலப் பொருட்களை இங்கு தானம் கொடுப்பதையும் காணப்படுகிறது. அந்த தானத்தை சமயபுரத்தம்மனே ஏதாவது ஒரு பெண்ணின் உருவில் வந்து பெற்று, ஆசீர்வதித்துச் செல்கிறாள் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

குழந்தையின்மை, தொழில் பிரச்சினை, ராகு-கேது தோஷம் போன்ற பல்வேறு வேண்டுதல்களுக்காக இங்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கிறார்கள்.

அதிகாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை கோவில் நடை திறந்திருக்கும்.
Area : Kannanoor
Bus Route :
Approx. 15kms from Trichy Chatiram Bus stand
Share |
 
:
Comments  
-- You will be the First person to comment for this Article --
 
Sign up for The Second Marriage.com and start searching profiles and get married instantly.

Post Your Comment :
 
 
 
 
 
 
Copyright © 2010 Thiruhalam.com