Article  
Poorandan Palayam
Specialities : Releiving Diseases  
x இத்திருத்தலம் கோயம்புத்தூரில் இருந்து 40 கி.மீ. தொலைவில் உள்ளது. இத்திருத்தலத்தை பஞ்சவேல் முருகன் கோயில் என்று அழைப்பார்கள். இக்கோயிலில் பஞ்சவேலைப் பிரதிஷ்டை செய்து முருகனாக வழிபடுகிறார்கள். இப்படிப்பட்ட வழிபாட்டிற்கென வரலாறு ஒன்று உள்ளது.

இத்திருத்தலத்தில் குமாரசுவாமி எனும் பெயருடைய சித்தர் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவர் கந்தனின் வேலை மட்டுமே வணங்கி வந்தார். அவர் வணங்கி வந்த வேலின் சக்தியால் பக்தர்களின் நோய்களை நீக்கி வந்தார். அவர் சித்தியடைந்த பிறகு அவ்வூர் மக்கள் அந்த வேலையும், அவரையும் மறந்து விட்டனர். நூற்றாண்டுகள் பல சென்றபின் சித்தரின் சந்ததியில் தோன்றிய ஒருவரின் கனவில் முருகப் பெருமான் தோன்றி, "பூராண்டான் பாளையத்தில் உன் மூதாதையர் வணங்கி வந்த வேலுக்கு ஆலயம் அமைப்பாயாக!" என்று ஆணை பிறப்பித்து அத்துடன் வேல் இருக்கும் இடத்தையும் காண்பித்தார்.

அவ்வாறு பூராண்டான் பாளையத்திற்கு அவ்வன்பர் வந்து முருகப் பெருமான் அடையாளம் காண்பித்த இடத்திற்கு சென்று குழி தோண்டி பார்த்தார். அவ்விடத்தில் நல்ல பாம்பு ஒன்று படுத்திருப்பதைப் பார்த்ததும், முருகாவென்று கூவினார். உடனே அந்த நல்ல பாம்பு அங்கிருந்து சென்று விட்டது. அங்கு பஞ்சவேல் பளபளத்திருந்தது.

கோவைக்கு பக்தர் அந்த பஞ்ச வேலுடன் வந்தார். பஞ்ச வேலை பக்தர் அவருடைய இல்லத்திலேயே வைத்து பூஜித்து வந்தார். இந்தச் செய்தியை அறிந்த பூராண்டான் பாளைய மக்கள் கோவைக்கு வந்து பஞ்சவேலை திரும்பித் தரும்படி கேட்டனர். அதற்கு அந்த பக்தர், "நானாக உங்கள் ஊரிலிருந்து இந்த வேலை எடுத்து வரவில்லை, முருகப் பெருமானின் ஆணைப்படியே எடுத்து வந்தேன். உங்களுக்கு வேண்டுமென்றால் நீங்களாக எடுத்துச் செல்லுங்கள்" என்றார். பூராண்டான் பாளைய மக்கள் பஞ்சவேலை எடுக்க எவ்வளவோ முயற்சி செய்தும், அவ்வேலை எடுக்க முடியவில்லை. பின்னர் அவ்வூர் மக்கள் குமாரசாமி சித்தரின் அருமை பெருமைகளை எடுத்துச் சொல்லி, பஞ்சவேலாயுதத்திற்கு கோயில் கட்டியும், சித்தருக்கு சமாதியும் அமைப்பதாக கூறினார்கள். ஊர் மக்களின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்டு அந்த பக்தர் பஞ்சவேலை எடுத்துக்கொண்டு தாம் கண்ட இடத்திலேயே கொண்டு போய் சேர்த்தார். பூராண்டான் பாளைய மக்களும் சொன்னதை செய்து நிறைவேற்றினார்கள். வேலுக்கு கோயில் எழுப்பினார்கள். சித்தருக்கும் கோயில் கட்டினார்கள்.

குமாரசுவாமி சித்தர் அருகே அமைந்திருக்கும் சமாதியின் அருகே புற்று ஒன்று உள்ளது. அந்த புற்று மண் தீராத வியாதியையும் தீர்த்து வைக்கும் சக்தி உள்ளது.
Area : Near
Bus Route :
40kms from Coimbatore
Share |
 
:
Comments  
-- You will be the First person to comment for this Article --
 
Sign up for The Second Marriage.com and start searching profiles and get married instantly.

Post Your Comment :
 
 
 
 
 
 
Copyright © 2010 Thiruhalam.com