Vaitheeswaran
Specialities : Releiving Diseases |

இத்தலத்தில் முருகப்பெருமான் சகலவிதமான பிணிகளையும் தீர்த்தருளும் வைத்தீஸ்வரனாய் சிவலிங்க வடிவில் காட்சி தந்து அருளுகிறார். இத்திருக்கோயிலின் தல விருட்சம் வேப்பமரமாகும். இத்திருக்கோயில் ராஜகோபுரங்கள், கட்டை கோபுரங்களுடன் இரண்டு பெரிய பிரகாரங்களுடன் காணப்படுகிறது. முதல் பிரகாரத்தில் திருக்கோயிலைச் சுற்றி பைரவர், வீரபத்ரர், கற்பக விநாயகர், காளி போன்ற தெய்வங்கள் காவல் தெய்வங்களாய் விளங்குகின்றனர்.
வேப்பமரத்தடியில் ஆதி வைத்தியநாதப் பெருமான் குடிகொண்டுள்ளார். கட்டைக் கோபுரத்தை அடுத்தாற் போல, ஆதிபுராணேஸ்வரர், வீரபத்ரர் ஆகியோருக்கான சன்னிதிகள் காணப்படுகின்றன.
இரண்டாம் பிரகாரத்தில் அன்னபூரணதேவி, தையல் நாயகி அம்மன், குமரகுருபரர், பத்திரகாளியம்மன், ஜுரஹேஸ்வரர், தண்டாயுதபாணி, செவ்வாய் ஆகியோர்களுக்கு தனித்தனி சன்னிதிகள் உள்ளது. இங்குள்ள தீர்த்தத்திற்கு சித்தாமிர்த தீர்த்தம், கோக்ஷுர தீர்த்தம் என்ற பெயர்கள் உண்டு.
இத்தீர்த்தத்தை அடுத்துள்ள மண்டபத்தில் தெற்கு நோக்கியவாறு தையல்நாயகி அம்மனின் அருட்சன்னதி காணப்படுகிறது. இச்சன்னிதியின் முன்பாக கொடிமரம் அமைந்துள்ளது. இம்மண்டபத்தின் கீழ்ப்புறமாக வைத்தியநாதப் பெருமானின் திருச்சன்னிதி அமைந்திருக்கிறது.
சன்னிதியின் இருபுறமும் பெரிய பிரம்மாண்டமான துவாரபாலகர்களும், உற்சவ மூர்த்திகளான அதிகார நந்திதேவர் மற்றும் ஜடாயு காணமுடிகிறது. கர்ப்பகிரஹத்தைச் சுற்றியுள்ள முதற் பிரகாரத்தில் செல்வமுத்துக் குமாரர், கெஜலெட்சுமி, அஷ்டலெட்சுமி, சிவகாமி சமேதராய் நடராஜர், சூரியன், செவ்வாய் தவிர இதர கிரகங்கள், அறுபத்து மூன்று நாயன்மார்கள், சப்த கன்னியர் ஆகியோரின் சன்னிதிகளும் காணப்படுகின்றன.
கர்ப்பகிருகத்தைச் சுற்றியுள்ள சிறிய பிரகாரத்தில் ஜடாயு குண்டத்தின் மீது ராமர், லெட்சுமணன், விசுவாமித்திரர், வசிஷ்டர் ஆகியோரின் சிலைகளைக் காணமுடிகிறது.
அடுத்தாற்போல் உள்ள கர்ப்பகிருஹத்தில் முருகப்பெருமான் மேற்கு முகமாக சிவலிங்க வடிவில் காணப்படுகிறார். இவரே மூலவரான வைத்தியநாதப் பெருமானாகும். முருகப்பெருமான், சிவலிங்க வடிவில் காட்சிதருவது இத்தலத்தில் மட்டுமே காணமுடிகிறது.
இத்திருத்தல முருகப் பெருமானை தரிசித்தால், சகல விதமான வியாதிகளும் குணமாகும் என்று நம்பப்படுகிறது.
Area : South | Bus Route : |
Nagapattinam District |
:
|
|||
|
|||
|
|||
Related Temples
Copyright © 2010 Thiruhalam.com