Article  
Valliyur
Specialities : General  
x திருநெல்வேலியிலிருந்து 2 கிலோ மீட்டர் தூரத்தில் காணப்படுகிறது. இக்கோயில் குன்றைக் குடைந்து குமரப் பெருமான் காட்சி தருகிறார். இது ஒரு குகைக் கோயிலாகும். இங்கு முருகப் பெருமான் வள்ளி தெய்வானையுடன் காட்சியளிக்கிறார். வள்ளியின் பெயரை தாங்கியே இவ்வூர் பெயர் பெற்று விளங்கியது.

இச்சந்நிதியை தனியே வலம் வர இயலாது. கிரிபிரதக்ஷிணம் தான் செய்ய முடியும். இத்தலத்தைப் பற்றி அருணகிரிநாதர் புகழ்ந்து பாடியுள்ளார். வள்ளியின் பெயரைத் தாங்கி நிற்கும் வள்ளியூரில் எழுந்தருளியுள்ள முருகன் வேண்டியவரம் அனைத்தையும் தருபவராக விளங்குகிறார்.

வள்ளி மலையின் தல வரலாறு மிகவும் சிறப்பாகும். முருகப் பெருமானின் திருவுருவம் ஒன்று, காண்போரை கவரும் வண்ணம் உருவாக்கப்பட்டது. அவ்விக்ரகம் கண்ட சிலரின் உள்ளம் பக்தியால் பரவசப்பட, அச்சிலையைத் தூக்கிக் கொண்டு சென்று விட்டனர். அவர்கள் வள்ளியூர் குகைப் பக்கம் வந்ததும் இளைப்பாற வேண்டி குகைக்குள் சிலையைச் சற்று நேரம் இறக்கி வைத்தனர். இளைப்பாறி முடிந்ததும் அச்சிலையை தூக்க முயற்சித்தனர். ஆனால் அதைத் தூக்க முடீயவில்லை. இறங்கிய முருகன் அங்கேயே உறைந்து விட்டார். தன்னைத் தூக்கி வந்த தொண்டர்களுக்கு முருகன் திருவருள் புரிந்தார்.

திருச்செந்தூர் செல்லும் முருகனடிமைகள் வள்ளியூர் சென்று முருகனை வணங்கி அருளாசி பெற வேண்டுமென்பது நியதியாகும்.
Area : Tirunelveli
Bus Route :
Share |
 
:
Comments  
1ASTRO SUNDARJIOn 05/10/2010
photos
Title : ASTRO SUNDARJI
VALLIYOOR IS THE CENTRE POINT OF THIRUNELVELI - THOOTHTHUKKUDI - KANNIYAAKUMARI DISTRICTS. VALLIYOOR IS SITUATED... 35 KMS NORTH FROM KANYAKUMARI & NAGERCOIL, 45 KMS SOUTH FROM THIRUNELELI, 65 KMS WEST FROM THIRUCHENDUR & ALSO 100 KMS FROM THIRUVANANTHAPURAM. FOR WORSHIP VALLI-DEVASENA-MURUGAN, YOU MUST COME THROUGH 1 KM GIRIVALAM. THIS PLACE IS VERY FAMILIAR FOR ALL KINDS OF DOSHA REMEDIES. ONE WHO GOES TO TIRUCHENDUR IS MUST COME HERE IN ADVANCE. FOR ANY KIND OF DETAILS OR HELP PLEASE CALL 04637-221739 9486666739 .
 
Sign up for The Second Marriage.com and start searching profiles and get married instantly.

Post Your Comment :
 
 
 
 
 
 
Copyright © 2010 Thiruhalam.com