Article  
Vayalur
Specialities : General  
x திருச்சி மாவட்டத்தில் திருச்சி நகருக்கு மேற்கே ஏழு மைல் தொலைவில் இத்திருத்தலம் காணப்படுகிறது. திருச்சியிலிருந்து சோமரசம்பேட்டை வழியாக இத்திருத்தலத்திற்கு பேருந்து வசதி உள்ளது.

இத்தலம் வயல்வெளியும், சோலைகள், சுனைகள் போன்ற இயற்கை வளம் கொழிக்க பசுமையான இடத்திற்கு மத்தியில் உள்ளதால் இத்தலம் வயலூர் எனப் பெயர் பெற்றது. வயலூர் முருகனை சூரியன், சந்திரன், அக்னி முதலான தேவர்கள் வணங்கி வழிபட்டதாக புராண வரலாறுகளில் கூறப்படுகிறது.

இத்தலத்திற்கு ஆதிவயலூர், குமார வயலூர், அக்னி வயலூர் என்ற திருப்பெயர்களும் உண்டு. இத்தலத்தில் தான் முருகப் பெருமான் அருணகிரிநாதருக்கு காட்சி தந்தருளினார். அருணகிரிநாதர் வயலூரிலிருந்த போது, வயலூர் முருகன் அருணகிரிநாதரை வயலூருக்கு வரவழைத்தார். அவ்வாறே அருணகிரிநாதர் வயலூர் வந்து முருகப் பெருமானை தரிசித்தார். முருகப்பெருமானின் கட்டளையின்படி வயலூர் முருகனைப் பாடினார். அருணகிரிநாதர், வயலூர் முருகனை சிறப்பித்துப் பாடியதாலும், முருகப் பெருமான் அவருக்குக் காட்சி அளித்ததாலும், இத்தலம் மேலும் சிறப்புற்று விளங்கியது.

அன்பர்களுக்கு அருளைத் தரும் வயலூர் முருகனின் திருக்கோயில் வயல்களினாலும், தென்னஞ்சோலையாலும் சூழப்பெற்று அதன் நடுவே அமைந்திருக்கிறது. இக்கோயிலுக்கு எதிரே தடாகம் ஒன்று அமைந்துள்ளது. இது குமார தீர்த்தம், சக்தி தீர்த்தம், அக்னி தீர்த்தம் என்ற பெயர் பெற்றது. இத்திருக்கோயில் ஒரே சுற்றுப் பிரகாரத்தை கொண்டது. வாயிலைக் கடந்து உள்ளே சென்றால் உள்ளே ஐந்து நிலைகள் கொண்ட ராஜகோபுரம் எழில் மிகுந்து காட்சி தருகிறது. இக்கோபுரம் ஏராளமான சுதை சிற்பங்களைத் தாங்கி நிற்கின்றது.

கோயிலினுள்ளே முதலில் முருகன் வழிபட்ட சிவபெருமானின் சன்னிதி உள்ளது. இச்சன்னிதியை ஒட்டி அன்னை பராசக்தியின் சன்னிதி உள்ளது. இச்சன்னிதிகளை சுற்றியே பிரகாரம் செல்கிறது. அக்னீஸ்வரர் சன்னிதியில் உள்ள நடராஜ உற்சவ மூர்த்தி திருவாசிகை இல்லாமல், இரு திருவடிகளையும் பீடத்தில் ஊன்றி சுந்தரத் தாண்டவக் கோலத்தில் காட்சி தருகிறார். பிரகாரத்தின் மேற்குப் பகுதியில் பொய்யாக் கணபதி, முத்துக் குமரன், வள்ளி தெய்வானையுடன் முருகப் பெருமான், மகாலெட்சுமி, சண்டிகேஸ்வரர், அருணகிரிநாதர் ஆகியோரின் சன்னிதிகள் காணப்படுகின்றன.

பிரகாரத்தின் வடபாகத்தில் நவக்கிரக சன்னிதியில் சூரியபகவான் இரு தேவியருடன் காட்சியளிக்கிறார். இது இத்தலத்தின் விசேஷ சிறப்பாகும். கருவறையில் முருகப் பெருமான் அழகே உருவாக காட்சி தருகிறார். பக்தர்களின் காவலராக காட்சி தருகிறார்.
Area : Trichy
Bus Route :
West side of Trichy
Share |
 
:
Comments  
-- You will be the First person to comment for this Article --
 
Sign up for The Second Marriage.com and start searching profiles and get married instantly.

Post Your Comment :
 
 
 
 
 
 
Copyright © 2010 Thiruhalam.com