Article  
Virali Malai
Specialities : General  
x திருச்சியிலிருந்து மதுரைக்குச் செல்லும் வழியில் 27 கி. மீ. தூரத்தில் இக்கோயில் காணப்படுகிறது. முருகப் பெருமானின் ஐந்தாம்படை வீடாகிய குன்று தோறாடலில் அடங்கியுள்ள மலைத்தலங்களில் குறிப்பிடத்தக்க விசேஷ தலமாகும். விராலிமலை சுமார் 120 அடி உயரம் இருக்கலாம். விராலி மலையிலுள்ள முருகன் கோயில் 10 மைல் சுற்றளவுக்கு உள்ளது.

அருந்ததி, வசிஷ்டர், காசிபமுனிவர், நாரதர் ஆகியோர் விராலிமலைப் பெருமானை தவமிருந்து தரிசித்து சாபவிமோசனம் பெற்றனர். அருணகிரி நாதர் முருகவேள் விராலிமலைக்குத் தரிசிக்க வரும்படி அழைப்பு விடுத்தார். விராலிமலை முருகனைத் தரிசிக்க செல்லும் முன்பாக, தெற்கேயுள்ள சரவணப் பொய்கையாம் நாகதீர்த்தம் எனும் குளத்தில் நீராடி அருகேயுள்ள மெய்க்கண்ணுடையாள் அம்மனின் சந்நிதியை தரிசிக்க வேண்டும்.

மலை மீதேறிச் செல்ல மலைக்குத் தென்புறம் கிழக்கில் இருந்து படிகள் காணப்படுகின்றன. சுமார் 200 படிகள் உள்ளது. படியேறும் இடத்திற்கு இடதுபுறமாக வீரேசுவரர் கோயில் காணப்படுகிறது. 100 படிகள் ஏறிச் சென்றதும் இடும்பன் சந்நிதி வடக்கு நோக்கி காணப்படுகிறது. அதனருகில் படிகளின் இருபுறமும் விநாயகர், முருகன் காட்சி தருகின்றனர். அவ்விடத்திலேயே வலப்பக்கமாக சொக்கநாதர், மீனாட்சியம்மன் கோயில்கள் முறையே கிழக்கு, தெற்கு நோக்கி உள்ளன. படிகள் வழியாக மலையேறிச் சென்றதும் தெற்கு நோக்கிய கோபுர வாசல் காணப்படுகிறது. கோபுரம் ஐந்து மாடங்களை கொண்டது. கோயில் ஒரு பிரகாரத்தை கொண்டுள்ளது. வடமேற்கு மூலை மேற்கு மூலையில் அகத்தியர், அருணகிரிநாதர் இவர்களின் திருவுருவங்கள் காணப்படுகின்றன. தென்கிழக்கில் உள்ள வீரவாகு தேவரின் சிலை அழகுடன் காட்சி தருகின்றது. தென்மேற்கு பகுதியில் நவகிரகங்கள், க்ஷேத்திரபாலர் சன்னிதியும் காணப்படுகின்றது. மூலஸ்தானத்திலுள்ள ஆறுமுகப் பெருமான், வள்ளி, தெய்வானையுடன் காட்சி தருகிறார். இவர் சண்முகநாதர் என்னும் திருப்பெயரிலும் அழைக்கப்படுகிறார்.

மலைக்குத் தென்புறமாக திருக்குளம் காணப்படுகிறது. அதை நாகதீர்த்தம் என்றழைக்கின்றனர். மலையடிவாரத்தில் சுனை தீர்த்தம் காணப்படுகிறது. இத்தீர்த்தமே முருகனுக்கு அபிஷேகமாக பயன்படுத்தப்படுகிறது. சுனையின் பக்கத்தில் கருப்பர் கோயில் காணப்படுகிறது.

இக்கோயிலில் நாள்தோறும் நாலுகால் பூஜை நடக்கிறது. வைகாசி விசாக கடைசி நாளன்று பிரம்மோற்சவம் நடைபெறுகிறது. தைப்பூசம், கந்தசஷ்டி விழாவும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இம்மலைத் தலத்திற்கு மேலும் சிறப்பளிக்கும் விதமாக முருகப் பெருமானின், திருவிளையாடல்கள் பற்றி

புராண வரலாறுகள் கூறும்போது..........

சரவணப் பொய்கையில் முருகப் பெருமான் தோன்றிய போது, வசிஷ்ட்டரின் மனைவியாகிய அருந்ததி அக்குழந்தைக்குப் பாலூட்ட மறுத்துவிட்டார். அதனால் அருந்ததியை வசிஷ்ட்டர் சபித்து விட்டார். வசிஷ்டர் அருந்ததியை வீணே சபித்து விட்டதாக எண்ணிய முருகப் பெருமான் வசிஷ்டரை சபித்துவிட்டார். சாபம் பெற்ற இருவரும் அதன்பின் விராலிமலை வந்து முருகப்பெருமானை வழிபட்டு சாபவிமோசனம் பெற்றனர் என்று கூறப்படுகிறது.

மாயாவி சூரபன்மனைப் பெற்ற பாவம் போக்க காசிபமுனிவரும், தன் தந்தை பிரம்மாவைத் தண்டித்ததற்காக, சிவநிந்தனைச் செய்த பாவத்தைப் போக்க நாரத முனிவரும் விராலிமலைக்கு வந்து முருகனை வழிபட்டு நற்பேறுகள் பெற்றதாக கூறப்படுகிறது. இத்தகைய வரலாறுகளைக் குறிக்கும் வகையில் விராலிமலைக் கோயிலில் காசிப முனிவர், நாரத முனிவர், அருந்ததி, வசிஷ்ட்டர் ஆகியோரின் திருவுருவச் சிற்பங்கள் காணப்படுகின்றன.

விராலிமலைக் கந்தன் வள்ளி, தேவசேனா சமேதராய் ஆறுதிருமுகங்களும், பன்னிரெண்டு திருக்கரங்களும் கொண்டு கிழக்கு திசை நோக்கி எழுந்தருளி அருள் செய்து வருகிறார்.
Area : Madurai
Bus Route :
Share |
 
:
Comments  
-- You will be the First person to comment for this Article --
 
Sign up for The Second Marriage.com and start searching profiles and get married instantly.

Post Your Comment :
 
 
 
 
 
 
Copyright © 2010 Thiruhalam.com