Article  
Sri Rangam
Specialities : 108 holiest vishnavite shrines  
x திருச்சிராப்பள்ளிக்கு வடக்கே 5 கிலோ மீட்டர் தூரத்தில், காவிரிக் கரையோரத்தில் பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் 3072 அடி நீளம் 2520 அடி அகலம் கொண்டு, ஏழு பிராகாரங்களையும் 21 கோபுரங்களையும் கொண்டுள்ளது. தெற்கு இராஜகோபுரம் 236 அடி கொண்டுள்ளது. கோயிலின் கருவறை 240 அடி நீளம் 180 அடி அகலம் கொண்டுள்ளது.

மூலவர் ஸ்ரீரங்கநாதப் பெருமாள் புஜங்க சயனத்தில் தெற்கு நோக்கி ஆதிசேஷன் மீது பள்ளி கொண்டு காட்சி அளிக்கின்றார். உற்சவர் நம்பெருமாள், தாயார் ஸ்ரீரங்க நாச்சியார், தீர்த்தம் சந்திர புஜ்கரணி காவிரி கொள்ளிடம், கோயிலின் விமானம் ப்ரணவாக்ருதி, தல விருட்சம் புன்னை மரம் உள்ளது.

சூரிய குலத்தைச் சேர்ந்த மனுகுமாரன் இஷ்வாகு. இவர் பிரம்மனை நோக்கித் தவம் புரிந்து திருமாலின் திருவாராதன விக்ரகத்தை கேட்டு வாங்கி அயோத்தியில் வைத்து வழிபட்டு வந்தார். இந்த விகரகத்தை ஸ்ரீராமபிரானும் வழிபட்டார்.

ஸ்ரீராமன், இராவணனனை வென்று சீதாபிராட்டியை மீட்டு அயோதிக்கு வந்த பொழுது தம் முன்னோர்கள் வழிபட்டு வந்த திருமாலின் திருவாராதன விக்ரகத்தை, அன்புக் காணிக்கையாக விபீஷணனுக்கு வழங்கினார். விபீஷணன் அதை எடுத்து இலங்கைக்குக் கொண்டு செல்லும் போது காவிரி, கொள்ளிடை நதிக்கரையில் வைத்து இளைப்பாறினார். மறுபடியும் அந்த விக்ரகத்தை எடுக்க முயன்றபொழுது விக்ரகத்தை எடுக்க முடியவில்லை. தான் இனிமேல் இங்குதான் நிரந்தரமாக இருக்கப்போவதாக பெருமாளே விபீஷணனிடம் கூறியதால் விபீஷணனும் மனம் வந்து அந்த விக்ரகப் பெருமாளை வணங்கி விட்டு விட்டு இலங்கைக்குச் சென்றான். பெருமாளும் விபீஷணனுக்கு அருளும் வகையில் இலங்கையை நோக்கித் தன் பார்வை வரும்படி சயனித்துக் கொண்டார்.

சோழநாட்டு அரசனான தர்மவர்மன் பெருமாளுக்கு முதலில் சிறு கோயிலைக் கட்டினார். இதற்கு பிறகு சேர, பாண்டிய அரசர்களும் இக்கோயிலைக் கட்டி முடிக்க அரும்பாடுபட்டார்கள். அது நாளடைவில் மிகப்பெரிய கோயிலாக உருவெடுத்து இன்றைக்கு வைஷ்ணவத் தலங்களில் முதலாவது கோயிலாக, புகழ்பெற்ற 108 வைஷ்ணவ தலங்களில் முன்னிலையில் நிற்கின்றது.

பெரியாழ்வார், ஆண்டாள், குலசேகர ஆழ்வார், திருமழிசை ஆழ்வார், தொண்டரடிப்பொடி, திருப்பாணாழ்வார், திருமங்கை, பேயாழ்வார், பூதத்தாழ்வார், நம்மாழ்வார் ஆகியோரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட ஸ்தலம். கம்பனது இராமாயணம் அரங்கேற்றியதும் இங்கேதான்.

ஸ்ரீராமாநுஜர் இறுதியில் திருநாடு அடைந்தாலும் அவரது திருமேனியை வசந்த மண்டபத்தில் - கெடாதவாறு மூலிகைச் சாந்து பூசி இன்றுவரை வைத்திருக்கிறார்கள்.

பரிகாரம் : இத்தலத்திலுள்ள மூலவரை - வெள்ளி அதிகாலை விஸ்வரூப தரிசனம் கண்டு வந்தால் திருமணமாகாதவர்களுக்கு சுக்கிரதோஷம் விலகி திருமணம் நடக்கும். பணக்கஷ்டம் உள்ளவர்கள் அந்த சங்கடத்திலிருந்து மீண்டு விடுவார்கள். வெளிநாடு சென்று முன்னுக்கு வரவேண்டும் என்று துடிப்பவர்கள், வேலை தேடுபவர்கள், சொந்தத் தொழில் செய்ய ஆசைப்படுபவர்கள் அனைவருக்கும் யோகத்தையும் செளபாக்கியத்தையும் தரக் கூடிய கோயில் என்பது மிகப் பெரிய சிறப்பு.
Area : Srirangam
Bus Route :
5kms from West side Thiruchirapalli
Share |
 
:
Comments  
-- You will be the First person to comment for this Article --
 
Sign up for The Second Marriage.com and start searching profiles and get married instantly.

Post Your Comment :
 
 
 
 
 
 
Copyright © 2010 Thiruhalam.com