Article  
Thirukarampanur
Specialities : 108 holiest vishnavite shrines  
x வைஷ்ணவத் தலங்கள் எல்லாம் நம்மை வாழ்விக்கத் தோன்றியவைகள். எத்தனை தவறுகள் தெரிந்து செய்தாலும், தெரியாமல் செய்தாலும் அதற்குரிய பலன்களை நாம் அனுபவிக்கும் பொழுது நாராயணா என்று ஒரு முறை மனமுவந்து பெருமாளைச் சரணாகதி அடைந்து விட்டால் அத்தனை பாவங்களும் விலகி கஷ்டங்கள் மறைந்து ஆனந்தமான இல்வாழ்க்கை, குடும்ப வாழ்க்கை, தொழில் முன்னேற்றம் அடையலாம் என்பது அசைக்க முடியாத சித்தாந்தம். ஓர் உதாரணமாக விளங்குவது உத்தமர் கோயில் என்றழைக்கப்படும் திருக்கரம்பனூரில் கோயில் கொண்டிருக்கும் கதம்ப க்ஷேத்ரம் என்று பெருமையாக சொல்லப்பட்டு வரும் புருஷோத்தமன் திருக்கோயில். இது திருச்சி விழுப்புரம் செல்லும் ரயில்வே பாதையில் இருக்கிறது. ஸ்ரீரங்கத்திலிருந்து திருவெள்ளறை போகும் பேருந்திலும் செல்லலாம்.

இதன் மூலவர் புருஷோத்தமன் புஜங்க சயனமாக அருள்பாலிக்கின்றார். கிழக்கு முகமாக சேவை சாதிக்கிறார். தாயார் பூர்வாதேவி - பூர்ணவல்லி. பெருமாளுக்குரியத் தீர்த்தம் கதம்ப தீர்த்தமாகும். மூன்று தலைகளில் ஒன்றைக் கொய்து வீசியெறிந்து விட்டார். இதனால் பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டதாகும்.

தன் கையிலிருந்து விலக மறுத்த கபாலத்தைக் கண்டு பிரம்ம தேவனுடைய சாபம் ஏற்பட்டு விட்டதை அறிந்த சிவபெருமான் தன் கையிலிருந்த கபாலம் விலகவும், பிரம்ம தேவரின் சாபம் நீங்கவும் என்ன வழி? என்று விஷ்ணுவிடம் கேட்டார். இதற்கு விஷ்ணு திருக்கரம்பனூரில் தன்னுடன் குடி கொண்டிருக்கும் மகாலெஷ்மியை அணுகி, அவள் கையால் அந்த கபாலத்தில் பிஷை இடச் செய்தால் கபாலமும் மறைந்து போகும் பிரம்மஹத்தி தோஷமும் விலகும் என்று வழிகாட்டினார். விஷ்ணுவின் இந்த யோசனையை ஏற்றுக்கொண்டு சிவபெருமான் திருக்கரம்பனூர் கோயிலுக்கு பிட்சாண்டவராக வந்தார். மகாலெஷ்மியும், சிவபெருமானுடைய வேண்டுகோளை ஏற்று அவர் கையிலிருந்த கபாலத்தில் பிஷை இட கபாலமும் மறைந்தது. சிவபெருமானுக்குரிய பிரம்மஹத்தி தோஷமும் விலகியது என்பது இதன் ஸ்தல புராணமாகும்.

திருமங்கையாழ்வாருக்கும் கதம்ப மஹரிஷிக்கும் உபரிசரவஸு முனிவர்க்கும் பெருமாள் நேரிடையாகவே தரிசனம் கொடுத்த தலம். திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்திருக்கின்றார்.

பரிகாரம் : எப்பேர்பட்ட பாவம் செய்தாலும் அவர் எங்கு எங்கு சென்று பாவத்தைப் போக்க சாந்திகள் செய்தும் பலன் இல்லாமல் போனவர்கள், கொலை செய்து தப்பித்துக் கொண்டவர்கள், குடும்பத்தைக் கெடுத்து சாபத்தைப் பெற்றவர்கள், ஆத்திரத்தால் அனைவரையும் மனம் புண்படுத்தி அதிகாரத்தால் கொள்ளை அடித்தவர்கள், வாரிசு இல்லாமல் தவிப்பவர்கள், கொடிய நோயினால் மருத்துவக் குணம் இல்லாமல் துடிப்பவர்கள் அனைவரும் இந்த புருஷோத்தமன் கோயிலுக்கு வந்து மூன்று நாள் தங்கி பிரார்த்தனை செய்தால் அவர்கள் செய்த அத்தனைப் பாவங்களும் போவதோடு எம்பெருமாட்டி மகாலெஷ்மியின் கருணைக்கும் பாத்திரமாகலாம் என்பது உண்மை.
Area : Thirukarampanur
Bus Route :
Trichy, Villupuram Railway route
Share |
 
:
Comments  
-- You will be the First person to comment for this Article --
 
Sign up for The Second Marriage.com and start searching profiles and get married instantly.

Post Your Comment :
 
 
 
 
 
 
Copyright © 2010 Thiruhalam.com