Article  
Thiruvellarai
Specialities : 108 holiest vishnavite shrines  
x சோழ நாட்டிற்கு எத்தனையோ சிறப்புகள் உண்டு. இறைவன் தானே விரும்பி அமர்ந்து பூலோகத்தில் அருள்பாலிக்கும் அதிசயங்களும் இங்கு உண்டு. எத்தனையோ அவதாரங்களை எடுத்து நம்மை ஆளவந்த எம்பெருமான் திருவெள்ளறை என்னும் திருவேதகிரி தலத்தில் புண்டரிகாஷன் என்னும் திருப்பெயரில் கோயில் கொண்டு அருள்பாலித்துக் கொண்டிருக்கின்றார்.

திருவெள்ளறை! இது திருச்சி, துறையூர் மார்க்கத்தில் சுமார் 20 கி.மீட்டர் தொலைவில் இருக்கிறது. கொள்ளிடம் ஆற்றின் வடபகுதியில், 10 ஏக்கர் நிலப்பரப்பில் சுமார் 36 அடி உயரமுள்ள பிரம்மாண்டமான மதிற்சுவற்றினால் மூன்று பிராகாரங்களை உள் அடக்கிக் கொண்டு நின்ற திருக்கோலத்தில் கிழக்கு முகமாக அருள் புரிகிறார் புண்டரிகாஷன் என்னும் திருநாமத்துடன்!

தாயார் செண்பகவல்லி; பங்கயச் செல்வி இந்தக் கோவிலின் மதிலுக்குள் ஏழு வகையான தீர்த்தங்கள் உண்டு. திவ்ய, கந்த க்ஷிர புஷ்கரிணிகள், குச, சக்ர, புஷ்கல, பத்ம, வராஹ மணிகர்ணிகா என்பது அவற்றின் பெயர்கள். விமானம் விமலாக்ருதி என்று பெயர். பெருமாள் இங்கு வந்து அறுபத்தி நான்கு சதுர்யுகமாகி விட்டது என்றும் சிபி சக்கரவர்த்திக்கும் பூமி தேவிக்கும் மார்க்கண்டேய முனிவர்க்கும் பகவான் நேரிடையாகத் தோன்றி காட்சி கொடுத்ததாகவும் வரலாறு. கங்கை, யமுனை, கோதாவரி போன்ற புண்ணிய நதிக்கரையோரம் வாழ்ந்த சுமார் 4,000 அந்தணர்களை சிபி சக்கரவர்த்தி இங்கு அழைத்துவந்து பெருமாளுக்கு சேவை புரிய வைத்ததாக ஒரு செய்தி உண்டு.

தை முதல் ஆனி மாதம் வரை உத்ராயண வாசல் வழியாகவும் ஆடி முதல் மார்கழி மாதம் வரை தக்ஷிணாயண வாசல் வழியாகவும் சென்று பெருமாளைத் தரிசனம் செய்ய வேண்டும். இதற்கு ஒரு காரணம் உண்டு. பெருமாளை நேரிடையாக தரிசனம் பெற இதுதான் சரியான பாதை என்று முனிவர்கள் சொன்னதாக ஒரு தகவல். நாழிகேட்டான் வாசல் என்று ஒன்று உண்டு. இந்த வாசலில் நின்று தான் - இரவில் வெகுநேரம் கழித்து கோயிலுக்குத் திரும்பிய புண்டரி காஷப் பெருமாளை வழிமறித்து ஏன் இவ்வளவு நேரம்? என்று கேட்டாளாம் செண்பகவல்லி அதற்காக இப்பெயர் நிலவுகின்றது.

ஒரு காலத்தில் மிகவும் வெண்மையான பாறைகளைக் கொண்டு மலைபோல் விளங்கிய இந்த இடம இப்பொழுது அப்படி எதுவும் காணப்படவில்லை. உய்ய கொண்டார் அவதார ஸ்தலம் இது; உடையவர் வைணவத்தை வளர்க்க இங்கிருந்துதான் அரும்பாடுபட்டார். பெரியாழ்வார், மணவாள மாமுனிகள் ஆகியோர் மங்களாசாஸனம் செய்த தலமாகும். எங்களாழ்வான் என்பவரால் நடா தூரம்மாள் என்பவனுக்கு ஸ்ரீ பாஷ்ய சிம்மாசனாதி என்ற விருதுபெற்ற தலம். சோழநாட்டுத் திருப்பதியாகக் கருதப்படுகிறது.

பரிகாரம் : இந்த தலத்தில் வந்து தங்கி புண்டரிகாக்ஷனை தினமும் தரிசித்து பிரார்த்தனை செய்தால் தோல் வியாதிகள் குணமாகும். விஷங்களால் பாதிக்கப்பட்டவர்கள், இராகு கேதுவினால் கடுமையாக அவதிப்படுபவர்கள், எதிரிகளின் தொல்லையால் மன நிம்மதி இழந்து துடிப்பவர்கள், தொழில் போட்டியினால் வியாபாரத்தின் இலாபத்தைத் தொலைத்தவர்கள், டாக்டர்களால் கைவிடப்பட்ட நோயாளிகள் அனைவரும் புதுவாழ்வு பெறுவதுடன் கடந்த ஜென்மத்தில் தெரிந்தோ தெரியாமலோ செய்த பாவங்களையும் விலக்கிக் கொள்ள வாய்ப்புண்டு.

இங்கு வந்து தரிசனம் செய்வதால் எல்லோருக்குமே மோட்சம் கிடைக்கும் என நம்பப்படுகிறது.
Area : Thiruvellarai
Bus Route :
Trichy, Duraiyur route approx. 20 kms
Share |
 
:
Comments  
-- You will be the First person to comment for this Article --
 
Sign up for The Second Marriage.com and start searching profiles and get married instantly.

Post Your Comment :
 
 
 
 
 
 
Copyright © 2010 Thiruhalam.com