Article  
Mutharamman Temple Kulasekarapatnam
Specialities : General  
x ஒவ்வொரு ஊருக்கும் ஒரு தனி சிறப்புண்டு, திருநெல்வேலி என்றால் அல்வாவும் தூத்துக்குடி என்றால் உப்புகமும் சிறப்புக்கு பெயர் பெற்றது. இதையெல்லாம் மிஞ்சும் வண்ணம் பெயர் பெற்று விளங்குகிறது "குலசேகரபட்டினம்" தசரா திருவிழா, இந்த தசரா திருவிழா மைசூரிலும், உ.பி.யிலும் மிக சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இதற்கு ஈடாக, இதை மிஞ்சும் வண்ணம் பல ஆண்டுகளாக, குலசேகர பட்டின தசரா திருவிழா நடைபெற்று வருகிறது.

அம்மன் பத்துநாட்களும், ஒவ்வொரு அம்மனாக மக்களுக்கு காட்சியளித்து இறுதியில் முத்தாரம்மனாக விஸ்வரூபம் எடுத்து அசுரனை சூரசம்ஹாரம் செய்வதுதான் இந்த குலசை தசரா திருவிழா

புராண கதைகளும், பெயர்காரணமும்

குலசேகர பாண்டிய மன்னன், சுற்றியுள்ள சிற்றரசர்களிடம் போரிட்டு வெற்றிபெற்று தம் ஆதிக்கத்தை மதுரை முழுவதும் பரப்பினார். இதன் விளைவாக கேரளா நாட்டை கைபற்ற எண்ணி திருவனந்தபுர மன்னனிடம் தோல்வியுற்றான். வரும் வழியில் இரவு வெகு நேரமானதால் தூங்கிவிட்டான் பாண்டிய மன்னன். அவன்முன் அறம் வளர்த்த நாயகி அம்மன் தோன்றி

"பாண்டிய மன்னா தூங்கிவிடாதே, தூங்கி உன நாட்டின் பெருமை இழந்து விடாதே ஒருமுறை தோற்றால் என்ன? மறுமுறை முயற்சி செய் என்று அருள்வாக்கு சொல்லி ஆசிர்வதித்து மறைந்தாள். மீண்டும் மன்னன் படையெடுத்து வெற்றி பெற்றான். இதனால் அம்மனுக்கு கோயில் கட்டி, கோவில் அருகே ஊர் அமைந்ததால் மன்னனின் நினைவாக குலசேகர பட்டினம் என பெயர் பெற்றது.

முத்தாரம்மனின் ஆதி பெயர் தட்டத்தி அம்மனாகும். அம்மனுக்கு கோபம் வரும் சமயம் ஊரில் உள்ள மக்களுக்கு முத்து வாரி போடுவது தட்டத்தி அம்மனின் வழக்கம். அவ்வாறு முத்துவாரி போடுவதால் அம்மனுக்கு முத்தாரம்மன் என்று பெயர் மாற்றப்பட்டது.

முத்தாரம்மன் பீட சிறப்பு பெற்ற காரணம்

முன்பொரு காலத்தில் வியாபாரிகள் தோனிகளில் சரக்குகளை எடுத்து சென்று வியாபாரம் செய்து வருவது வழக்கம். ஒரு செட்டியார் தன் மனைவியுடன் குலசேகர பட்டின கடற்கரையில் சென்றபோது கடல் அலையால் அவருடைய சரக்குகள் கடலில் மூழ்கியது. வேதனையுற்ற செட்டியாரும், அவர் மனைவியும், சிவனை வேண்டினார்கள். சிவனும் அவர்கள் மீது இறக்கம் கொண்டு அவர்களுக்கு காட்சி தந்து என்ன வரம் வேண்டும் என கேட்டார். "ஆண்டவனே எங்களுக்கு காட்சி தந்ததே நாங்கள் செய்த பாக்யம், நீங்கள் (சிவனும் பார்வதியும்) இருவரும், திருமண கோலத்தில் இதே போல் பக்தர்களுக்கு காட்சி தர வேண்டுகிறேன் என்று வேண்டினார். இறைவனும் "அவ்வாறே ஆகட்டும்" என்று கோயில் பீடத்தில் காட்சி தருகிறார்.

விழா தொடங்கும் நாட்குறிப்பு

வருடந்தோறும் புரட்டாசி மாதம் அமாவாசைக்கு அடுத்த திருநாளில் அம்மனுக்கு காப்பு கட்டி கொடியேற்றத்துடன் தசரா திருவிழா மிகவும் விமர்சையாக தொடங்குகிறது. அம்மன் காப்பு கட்டியவுடன் வெளியூரில் இருந்து பக்தர்கள் அம்மனின் வேண்டுதலை நிறைவேற்றுவதும், கடற்கரையில் இருந்து காளியம்மனை அருளோடு ஊர்வலமாக, அழைத்து கோவில் ஸ்தானத்துக்கு சென்று முத்தாரம்மனை வழிபட்டு அவரவர் ஊருக்கு செல்கின்றனர்.

அதிலிருந்து 10 நாட்களும் உள்ளுர்வாசிகள் முதல் வெளியூர்வாசிகள் அனைவரும் அசைவங்கள் எதுவும் சேர்க்காமல் கடும் விரதம் இருந்து காளியம்மனின் வேடம் போட்டு 90 நாட்களும் அரிதாரம் பூசுகின்றனர். 10 நாட்கள் மட்டும் விரதம் இருந்து அவர்கள் விரும்பிய அரிதாரம் போடுகிறார்கள்.10 நாள் காப்பு கட்டியவர்கள் குலசேகரம் சென்று அன்று இரவு 11 மணிக்கு நடைபெற இருக்கும், அம்மனுக்கும், அசுரனுக்கும் நடைபெறும் சூரசம்காரம் நிகழ்ச்சியை கண்டு மெய் சிலிர்க்கின்றனர். சூரசம்ஹாரம் நடைபெறும் நாளில், அம்மனுக்கு செலுத்த வேண்டிய காணிக்கையை செலுத்துகின்றனர். சூரசம்ஹாரம் முடிந்தவுடன் பக்தர்கள் தம் கையில் உள்ள காப்புகளை காளியம்மன் மூலம் அவிழ்க்கின்றனர்.

காளி அம்மன் வரலாறு

உலகையே தன் கைக்குள் கொண்டுவர அசுரபலம் கொண்ட அரக்கன் சிவனை நோக்கி பல ஆண்டுகளாக கடுந்தவம் புரிகின்றான்.சிவன் உடனே அந்த வரத்தை வழங்குகிறார், அசுரன் உடனே சிவனையே கொல்ல முற்படுகிறான். பார்வதி தேவி துர்கையாக மாறி அவனை அழிக்கிறாள்.

இந்த நிகழ்ச்சியை கருவாக கொண்டுதான் 10ம் நாளில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. சூரசம்காரம் செய்யும்போது கீழேவிழும் அசுரனின் தலையை துர்கை அம்மன் சிம்மவாகனத்துடன் தன் கையில் ஏந்துகிறாள். அசுரனின் ரத்தம் பூமியில் பட்டவுடன் இரத்தத்தின் வழயாக மீண்டும் அசுரனாக உருவெடுக்ககூடாது என்று எண்ணிய துர்க்கை அம்மன் சண்டி அம்மனை அசுரனின் இரத்தத்தை உறுஞ்சு கட்டளையிட்டாள். அவ்வாறே உறிஞ்சிய துளிகள் கீழே விழும் போது காளியம்மனாக உருவெடுத்தாள்.

இங்கு 8 வகை காளி அம்மன்கள் குடியிருப்பது சிறப்பு அம்சமாகும்.

1) கருங்காளி 2) பத்ரகாளி 3) சந்தியம்மன் 4) அங்காளம்மன் 5) தட்டத்தி அம்மன் 6) பரமேஸ்வரி 7) வீராகாளி 8) அறம் வளர்த்த நாயகி அம்மன்

இதில் வீராகாளியம்மன் மட்டும் ஊருக்கு வெளியே ஆலயம் அமைந்துள்ளது.

இப்படி பல வகையிலும் சிறப்பு வாய்ந்த முத்தாரம்மன் தசரா திருவிழாவை கான மக்கள் அலைகடலென திரண்டு வருகிறார்கள்.

நீங்களும் அம்மனின் அருள் பெற "குலசை தசரா திருவிழாவுக்கு வாருங்கள்.
Area : Kulasekarapatnam
Bus Route :
Share |
 
:
Comments  
-- You will be the First person to comment for this Article --
 
Sign up for The Second Marriage.com and start searching profiles and get married instantly.

Post Your Comment :
 
 
 
 
 
 
Copyright © 2010 Thiruhalam.com