Article  
Kunnathur medu Sri Krishnar
Specialities : General  
x கேரள மாநிலம் பாலக்காட்டுக்கு கிழக்கே அமைதியான சூழ்நிலையில் அமைந்துள்ளது குன்னத்தூர் மேடு கிருஷ்ணர் கோவில், இங்குள்ள கிருஷ்ணர் விக்ரகம் 2அடி உயரம் கொண்டதாகும். இது மேற்கே பார்த்து பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இரண்டு கைகளிலும் வெண்ணைய் வைத்துக் கொண்டு நவநீத கிருஷ்ணராக நின்ற கோலத்தில் காட்சி தருகிறார், இந்த கிருஷ்ணர்.

சுமார் 100 வருடங்களுக்கு முன்பு இந்தக் கோவில் கட்டப்பட்டது. சன்னதியின் நான்கு பாகமும் மற்றும் படிகளிலும் பித்தளை கவசம் பொதிக்கப்பட்டுள்ளது. கோவிலுக்குள் வடக்கு பாகத்தில் கணபதி கோவில் கட்டப்பட்டுள்ளது, கிழக்கே பார்த்து தரிசனம் தரும் இந்த கணபதியை 'பலிகளப கணபதி' என்று அழைக்கிறார்கள். சன்னதியின் வெளியே உள்ள மூன்று பாகத்தின் சுவற்றிலும் சின்ன, சின்ன விக்ரகங்கள் உள்ளன.

சதுர்த்தி விழா :
தெற்கு பகுதியில் உள்ள சுவற்றின் கிழக்கு பாகத்தில் பால கணபதியும், மேற்கு பாகத்தில் தட்சிணா மூர்த்தியும் தெற்கு நோக்கி அருள் பாலிக்கிறார்கள். மேற்கே உள்ள சுவற்றில் லிங்கோத்பவர் காட்சி தருகிறார். வடக்கு பாக சுவற்றில் மேற்கு பக்கம் துர்க்கையும், கிழக்கு பாகம் பாலமுருகரும், வடக்கு பார்த்து காணப்படுகிறார்கள்.

இங்குள்ள பணபதிக்கு விநாயக சதுர்த்தி விழா வெகு விறப்பாக கொண்டாடப்படுகிறது. எல்லா வருடமும் அன்னாபிஷேகமும் உண்டு. கணபதிக்கு பின்னால் கிழக்கே பார்த்து நாகர் சிலை உள்ளது. கிருஷ்ணர் கோவிலுக்கும் கணபதி கோவிலுக்கும் நடுவில் நவக்கிரக சன்னதி இருக்கிறது. என்றாலும், இங்கு செல்ல தனிவழி வாயில் உள்ளது. இதனால் நவக்கிரக சன்னதி கோவிலுக்கு வெளியே வந்த பிறகுதான் செல்ல வேண்டும்.

இந்த கோவிலில் கிருஷ்ணஜெயந்தி விழா மிகவும் விமரிசையாக 10 நாட்களுக்கு கொண்டாடப்படும். கிருஷ்ண ஜெயந்தி அன்று விசேஷ பூஜையும் அன்னதானமும் நடக்கும். மாலையில் பஞ்சவாத்தியம், பாண்டி மேளம், யானை ஸ்ரீவேலி முதலியைவுயம் உண்டு.

நோய் தீரக்கும் பிரசாதம்
இதைக் காண்பதற்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் பல இடங்களில் இருந்தும் வருவார்கள். அன்று இரவு நடக்கும் ஜென்ன பூஜை (கிருக்ஷ்ண பகவான் பிறந்த நேரம்) மிகவும் முக்கியமானது. இதைக் காண்பதற்கும், பிரசாதம் வாங்குவதற்கும் கூட்டம் அதிகமாக இருக்கும். இந்த பூஜை இரவு 11 மணியிலிருந்து 12 மணி வரை நடக்கும்.

இந்த பூஜையின் பிரதான நைவேத்தியத்தை 'முக்குடி' என்று சொல்வார்கள். இது, சுக்கு, திப்பிலி, ஏலக்காய், ஓமம், பெருங்காயம், வெல்லம் முதலியவை சேர்த்து இடித்து செய்யப்படுவதாகும். இதை சுவாமிக்கு நிவேதனம் செய்த பிறகு எல்லா பக்தர்களுக்கும் வழங்குவார்கள். இதை சாப்பிடுவதால் நோய்கள் மறையும் என்கிறார்கள்.

இந்தக் கோவில் பரதிஷ்டை விழா சித்திரை மாதம் புனர்பூச நட்சத்திரம் அன்று கொண்டாடப்படுகிறது. அன்று நடைபெறும் களவ வழிபாடு மிகவும் விசேஷம். குருவாயூர் ஏகாதசி அன்று, அதாவது மண்டல காலத்தில் (கார்த்திகை மாதம் சுக்ல ஏகாதசி) இங்கும் விசேஷமாக ஏகாதசி கொண்டாடப்படும். லட்சார்ச்சனையும் உண்டு. குருவாயூரில் கொடுப்பது போல ஏகாதசி அன்று இங்கு எல்லோருக்கும் புழுக்கும், கஞ்சியும் வழங்குகிறார்கள். மார்கழி மாதம் வரும் முதல் புதன் கிழமை குசேலர் தினமாக கொண்டாடப்படுகிறது. அப்போது கிருஷ்ணருக்கு அவில் நைவேத்தியம் செய்யப்பட்டு பிரசாதமாக எல்லோருக்கும் வழங்கப்படுகிறது.

"நாராயணீயம்" என்ற புகழ்பெற்ற காவியத்தை இயற்றிய மேல்பத்தூர் ஸ்ரீநாராயண பட்டதிரியின் நினைவு நாளான கார்த்திகை மாதம் 28ம் தேதி இங்கு 'நாராயணீய தினம்' என்று கொண்டாடப்படுகிறது. அன்று நாராயணீயம் பாராயணம் செய்வார்கள். தினமும் காலை 4,45 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. 8,15 முதல் 8,45 வரை உச்ச பூஜை நடைபெறுகிறது. அப்போது கிருஷ்ணருக்கு பால்பாயசம் நைவேத்தியம் செய்கிறார்கள். 10 மணிக்கு நடை அடைக்கப்படுகிறது. பிறகு, மாலை 5,15 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. 6,15 மணிக்கு தீபாராதனையும், அதைத் தொடர்ந்து 6.45மணிக்கு அத்தாள பூஜையும் நடக்கிறது, அத்தாள பூஜையில் சர்க்கரை பாயசம் நைவேத்தியம் செய்கிறார்கள். இரவு 8 மணிக்கு நடை அடைக்கப்படுகிறது.

திருமணம் நடக்கவும், சந்தானம் கிடைக்கவும், குழந்தைகள் நோயின்றி, கல்வியில் தேரச்சி பெறவும், இந்த பாலகிருஷ்ணரை வழிபட தினமும் ஏராளமானபேர் வந்து செல்கிறார்கள். நாமும் இந்த குன்னத்தூர் மேடு ஸ்ரீ கிருஷ்ணரை வழிபட்டு எல்லா பாக்கியமும் பெறுவோமாக !
Area :
Bus Route :
Share |
 
:
Comments  
1vinay NadgirOn 12/10/2010
photos
Title :
 
Sign up for The Second Marriage.com and start searching profiles and get married instantly.

Related Temples


Post Your Comment :
 
 
 
 
 
 
Copyright © 2010 Thiruhalam.com