Article  
Swamimalai Murugan Temple
Specialities : General  
x சுவாமிமலை, திருவேரகம். குருமலை, தாதரீகரி, சுந்தராசலம் என்ற பெயர்களை கொண்ட இத்திருமலை கும்பகோணத்திற்கு மேற்கே மூன்று கல் தூரத்தில் காவிரியாற்றின் வடகரையில் அமைந்து இருக்கிறது. பிரணவ உபதேசம் கேட்ட பின்பு, சிவபெருமான் முருகனை நோக்கி, "நீதான் எனக்கு சாமி, ஆதலால் இத்தலம் சாமிமலை என வழங்குக" என்று அருளியதால் இம்மலைக்கு சுவாமிமலை என்று பெயர்பெற்றது. ஏர் + அகம் = ஏரகம் என்றால் அழகும் எழுச்சியும் உள்ள இடம் என்று பொருள் ஆகிறது. முருகப்பெருமான் ஒரு செய்குன்றின் மீது எழுந்தருளியுள்ளார். இங்குள்ள முருகப்பெருமானுக்கு சுவாமிநாதன், குருநாதன், தகப்பன் சாமி என்ற திருநாமங்கள் அவருக்கு உண்டு.

திருமுருகாற்றுப் படையில் நக்கீரர் இத்தலத்தை நான்காம் படைவீடாகப் போற்றிப் புகழ்ந்து பாடியுள்ளார்.

இத்திருக்கோயில் சுமார் அறுபது அடி உயரமுள்ள செயற்கை குன்றின் மீது உள்ளது. மலைக்குக் கீழே சிவபெருமானின் திருக்கோயில் அமைந்துள்ளது. இத்திருக்கோயிலுக்கு மொத்தம் மூன்று வாயில்கள் இருக்கின்றன. ஐந்து நிலை கொண்ட கோயில்கள் கம்பீரமாக காட்சி தருகின்றன. மூன்றாவது வாயிலில் உள்ள கோபுரத்தில் சுதைச் சிற்பங்கள் காணப்படுகின்றன. கோயிலுக்கு மூன்று பிரகாரங்கள் உள்ளன. முதல் பிரகாரம் மலையடிவாரத்திலும், இரண்டாம் பிரகாரம் மலை நடுவிலும், மூன்றாம் பிரகாரம் மலை உச்சியிலும் அமைந்துள்ளது.
Area :
Bus Route :
Share |
 
:
Comments  
-- You will be the First person to comment for this Article --
 
Sign up for The Second Marriage.com and start searching profiles and get married instantly.

Post Your Comment :
 
 
 
 
 
 
Copyright © 2010 Thiruhalam.com