Article  
Bhagavathy Amman Temple
Specialities : General  
x ஆண்கள் சபரிமலைக்கு இருமுடி கட்டிச் செல்வது போல் பெண்களும் ஒரு கோவிலுக்கு இருமுடி கட்டிச் செல்கிறார்கள். இந்த கோவிலும் கேரளாவில்தான் அமைந்துள்ளது. அந்த மாநிலத்தில், திருவல்லலாவை அடுத்து ஆலப்புழை மற்றும் பத்தனம்திட்டை ஆகிய மாவட்டங்களின் எல்லையில் நீரேற்றுபுரத்தில் அமைந்துள்ள ஸ்ரீசக்குளத்துகாவு பகவதி அம்மன் கோவில்தான் அது. சுமார் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் நாரத முனிவரால் பிரதிஷ்டை செய்யப்பட்டதாக கருதப்படும் இந்த கோவில், 'பெண்களின் சபரி மலை' என்றும் அழைக்கப்படுகிறது.

இருமுடி:- இந்த பகவதி அம்மனின் அருளைப்பெற பெண்கள் விரதம் இருந்து இருமுடி கட்டி வருவது சிறப்பு பெற்றதாகும். சபரிமலைக்கு செல்லும் அய்யப்ப பக்தர்களும் இங்கு வந்து செல்கிறார்கள்.

திருக்கார்த்திகை அன்று இங்கு நடைபெறும் பொங்கல் வழிபாடு புகழ்பெற்றதாகும். அன்றைய தினம் லட்சக்கணக்கான பெண்கள் பொங்கல் வைத்து வழிபாடு செய்வது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்.

மேலும், இங்கு நடைபெறும் நாரி பூஜையும் சிறப்பு பெற்றது. இந்த பூஜையின் சிறப்பம்சம், பெண்களை பீடத்தில் அமர்த்தி தேவியாக பாவித்து, அவர்களுடைய பாதங்களை பிரதான பூசாரி தன் கைகளால் தண்ணீர் கொண்டு கழுவி, அவர்களுக்கு பூஜைகள் செய்து வணங்குவதுதான்.எங்கெல்லாம் பெண்கள் ஆராதிக்கபபடுகிறார்களோ, அங்கெல்லாம் பெண்கள் ஆராதிக்கபபடுகிறார்களோ, அங்கெல்லாம் சகல ஐஸ்வரியங்களும் உண்டாகும் என்ற ஐதீகத்தின்படி இந்த பூஜை நடத்தப்படுகிறது.

சர்வமத பிரார்த்தனை: - ஒவ்வொரு தமிழ் மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமையும் பல்வேறு மூலிகைகளைக் கொண்டு தீர்த்தம் தயாரித்து, தேவிக்கு அபிஷேகம் செய்கிறார்கள. பின்னர், அந்த தீர்த்தத்தை பிரசாதமாக பக்தர்களுக்கு தருகிறார்கள். அதை குடித்தால் தீராத நோய்கள் தீர்ந்துவிடும் என்கிறார்கள்.

போதைக்கு அடிமையானவர்களுக்கும் இங்கு விசேஷ பிரார்த்தனை நடைபெறுகிறது. வெள்ளிக்கிழமை அன்று அவர்களை அழைத்து வர வேண்டும். கோவில் தலைமை பூசாரி சில மந்திரங்களை கூறி, அவற்றை உச்சரிக்குமாறு போதைக்கு அடிமையானவர்களிடம் கூறுகிறார். தொடர்ந்து அவர்களை வெற்றிலை, மிளகு பிரசாதத்தை சாப்பிட வைத்து, தேவியின் வாளைத் தொட்டு சத்தியமும் வாங்கிக் கொள்கிறார். அதன்பிறகு எப்பேற்பட்ட குடிகாரர்களும் தங்களது குடியை நிறுத்திவிடுகிறார்கள் என்கிறார்கள்.

வெற்றிலை ஜோதிடம்:- 7 வெற்றிலையையும், ஒரு பாக்கையும் கொண்டு சொல்லப்படும் வெற்றிலை ஜோதிடமும் இந்த கோவிலில் பிரசித்தி பெற்றது. இந்த ஜோதிடம் பார்க்க கேரள மக்கள் மட்டுமின்றி பிற மாநிலங்களில் இருந்தும் வருகிறார்கள்.

இத்தகைய சிறப்புமிக்க இந்த கோவில், திருவல்லா ரெயில் நிலையத்தில் இருந்து தகழி சாலையில் 10 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. கோட்டயம், சங்கனாச்சேரி, ஆலப்புழை, செங்கனூர் ஆகிய இடங்களில் இருந்து இங்கு செல்ல பஸ் வசதி உள்ளது.
Area :
Bus Route :
Share |
 
:
Comments  
1nagarajan.jOn 06/08/2010
photos
Title : samayapuram mariamman temple
sir if possible annex photos of goldencovered tower and goldchariot amman in this web site. Thanks
 
Sign up for The Second Marriage.com and start searching profiles and get married instantly.

Post Your Comment :
 
 
 
 
 
 
Copyright © 2010 Thiruhalam.com