Article  
Athikesava Perumal Peyalwar Temple Mylapore
Specialities : General  
x முதலாழ்வார்கள் மூவரில் ஒருவரான, பேயாழ்வார் அவதரித்த தலம் இது. திருமாலின் ஆயுதங்களில் ஒன்றான நந்தகம் என்னும் வாள், மகாலட்சுமியிடம் தனக்கு உபதேசம் செய்யும்படி வேண்டியது. ஒப்புக்கொண்ட மகாலட்சுமி, அந்த வாளை பூலோகத்தில் பிறந்து மகாவிஷ்ணுவை வணங்கும்படியும், அதன்பின் தான் உபதேசம் செய்வதாகவும் கூறினாள். அதன்படி நந்தகம் (வாள்), இங்குள்ள மணி கைரவிணி தீர்த்தத்தில் மலர்ந்த அல்லி மலரில் அவதரித்தார். இவர் "மகதாஹ்வயர்' என்று பெயர் பெற்றார். இத்தலத்தில் பெருமாளுக்கு தினசரி பூமாலை அணிவித்து சேவை செய்த இவருக்கு, மகாலட்சுமி உபதேசம் செய்தாள். பெருமாள் மீது அதீதமாக பக்தி கொண்டதால் இவர், "பேயாழ்வார்' என்று பெயர் பெற்றார். "பேய்' என்றால் "பெரியவர்' என்றும் பொருள் உண்டு. ஆழ்வார்களில் இவர் பெரியவர் என்பதாலும் இப்பெயரில்அழைக்கப்பட்டதாகச் சொல்வர். திருமழிசையாழ்வார் இவரை, தனது குருவாக ஏற்றுக்கொண்டு உபதேசம் பெற்றார்.பெருமாள் சன்னதி முன்மண்டபத்தில் தெற்கு நோக்கி, அமர்ந்த கோலத்தில் பேயாழ்வார் தனிச்சன்னதியில் இருக்கிறார்.இக்கோயிலிலிருந்து சற்று துரத்தில், பேயாழ்வார் அவதரித்த கைரவிணி கிணறு தற்போதும் இருக்கிறது. ஐப்பசி மாத சதயம் நட்சத்திரத்தில், பேயாழ்வாருக்கு திருநட்சத்திர விழா நடக்கிறது. அன்று பார்த்தசாரதி கோயிலில் இருந்து சுவாமிக்கு அணிவித்த மாலை, துளசி, பரிவட்டம், சந்தனம் மற்றும் அவருக்குப் படைத்த நைவேத்யம் ஆகியவற்றை கொண்டு வந்து, பேயாழ்வாருக்கு படைக்கின்றனர்.இவ்விழாவின் 3ம் நாளில் பேயாழ்வார், தன் பிறப்பிடத்திற்குச் சென்று, "திருக்கோவிலுர் உற்சவம்' காண்கிறார். திருக்கோவிலுரில் முதலாழ்வார்களான பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் ஆகிய மூவரையும், ஒன்றாக சந்திக்க வைத்து காட்சி கொடுத்தார் பெருமாள். இதன் அடிப்படையில் இங்கு இந்த வைபவம் நடக்கிறது.
இவ்விழாவின்போது, மூன்று ஆழ்வார்களையும் அருகருகில் நெருக்கமாக வைத்து, கருட வாகனத்தில் சுவாமி காட்சி கொடுப்பார். 9ம் நாளில் பேயாழ்வார் தேரில் உலா செல்கிறார். தை மாதத்தில் தெப்பத்திருவிழாவின்போது, திருமழிசையாழ்வாருக்கு பேயாழ்வார் குருவாக இருந்து உபதேசம் செய்த வைபவம் மிக விசேஷமாக நடக்கும்.புரட்டாசி மாதத்தில் ஒருநாள் பேயாழ்வார், திருவல்லிக்கேணிக்கு எழுந்தருளுவார். அப்போது சுவாமியின் சடாரியால் ஆழ்வாருக்கு மரியாதை செய்து வரவேற்பு கொடுப்பர். அதன்பின், ஆழ்வார் மூலஸ்தானத்திற்குள் சென்று சுவாமியை தரிசித்து, மங்களாசாசனம் செய்வார். பின்பு பார்த்தசாரதியுடன் வீதியுலா சென்றுவிட்டு, கோயிலுக்குத் திரும்புவார்.

மூலஸ்தானத்தில் ஆதிகேசவப்பெருமாள், நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். உடன் ஸ்ரீதேவி, பூதேவி இல்லை. திருவல்லிக்கேணி பார்த்தசாரதியை மங்களாசாசனம் செய்த திருமங்கையாழ்வார், இத்தலத்தையும் சேர்த்து, "மாடமாமயிலைத் திருவல்லிக்கேணி கண்டேனே'' என்றும், திருமழிசையாழ்வார், "நீளோதம் வந்தலைக்கும் மாமயிலை' என்றும் பாடியுள்ளனர். பிரகாரத்தில் ராமர், சக்கரத்தாழ்வார், ஆண்டாள், வீர ஆஞ்சநேயர் ஆகியோருக்கு சன்னதிகள் உள்ளது.ஏகாதசி, திருவோணம், பவுர்ணமி, அமாவாசை, தமிழ் மாதப்பிறப்பு ஆகிய நாட்களில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் ஆதிகேசவரும், உத்திரம் நட்சத்திரம், வெள்ளிக் கிழமைகளில் தாயார், பூரம் நட்சத்திரத்தில் ஆண்டாள், புனர்பூச நட்சத்திரத்தில் ராமர் மற்றும் திருநட்சத்திர நாட்களில் ஆழ்வார்களும் இங்கு புறப்பாடாவது விசேஷம்.பங்குனி மாதத்தில் பிரம்மோற்ஸவம் நடக்கிறது. இவ்விழாவின் 10 நாளில், 12 சப்பரங்களில் 12 ஆழ்வார்கள் மற்றும் 21 வைணவ ஆச்சார்யார்கள் என 33 பேர் எழுந்தருளி, சுவாமியுடன் வீதியுலா செல்வர். இந்த விழா இங்கு விமரிசையாக நடக்கும். தை அமாவாசையை ஒட்டி 5 நாட்கள் தெப்பத்திருவிழா நடக்கிறது.

மயிலாப்பூர்- 600 004. சென்னை
Area :
Bus Route :
Share |
 
:
Comments  
-- You will be the First person to comment for this Article --
 
Sign up for The Second Marriage.com and start searching profiles and get married instantly.

Post Your Comment :
 
 
 
 
 
 
Copyright © 2010 Thiruhalam.com