Article  
Mahisasuramarthini - Navarathiri Festival
Specialities : God of Speciality Festivals  
x புரட்டாசி மாதத்தின் வளர்பிறையில் முதல்நாள் நவராத்திரி பண்டிகை ஆரம்பமாகிறது. நவமி வரை ஒன்பது நாட்கள் விழா கொண்டாடப்படும். பத்தாவது திரியான தசமியுட் விஜயதசமி விழா நிறைவு பெறுகிறது.

இந்த பண்டிகைளை சாரதா நவராத்திரி என்றும், தசரா பண்டிகை என்றும் கூறுவர். இச்சாசக்தி, கிரியா சக்தி, ஞானசக்தி என்பது முறையே பார்வதி, லட்சமி, சரஸ்வதியை குறிக்கும். ஆதலால் நவராத்திரியின் முதல் மூன்று நாட்கள் துர்க்கை, அடுத்த மூன்று நாட்கள் மகாலட்சுமி, இறுதி மூன்று நாட்கள் மகாசரஸ்வதி ஆகிய மூன்று தேவியரையும் பூஜித்து வழிபடவேண்டும்.

துர்க்கையை வணங்குவதால் தீரமும், வீரமும், லட்சுமியை துதிப்பதால் சீரும், செல்வமும், சரஸ்வதியை போற்றுவதால் கல்வியும், அறிவும் நம்மை வந்து பேரும் என்பது ஐதீகம். விஜயதசமி ஜெயம், வீரம், செல்வம், கல்வி அனைத்துக்கும் முக்கிய தினமாக கருதப்படுகிறது.

விஜயதசமி என்றால் வெற்றி தருகிற நாள் என்று பொருள்படும். அன்றைய தினம் புதுவேலை, கல்வி, பாட்டு இவைகளை தொடங்க மிகவும் சிறந்தது.

பழங்கால தமிழ் மன்னர்கள் விஜய தரசியன்று துர்க்கா பூஜை செய்து வழிபட்டு எதிரிநாட்டின் மீது படையெடுத்து சென்றதாக வரலாற்று செய்திகள் தெரிவிக்கின்றன.

எனவே விஜயதரமியன்று மக்கள் நலல காரியங்களை தொடங்குகின்றனர். இந்த நாளிள் குழந்தைகளுக்கு ஆரம்ப கல்வியை தொடங்கி வைப்பது நீண்ட காலமாக இருந்து வருகிறது. நவராத்திரி விழாவினை உத்திரபிரதேசகத்தில் ராமலீலா என்றும் வங்காளபிரதேசத்தில் காளிதுர்கா பூஜை என்றும் கொண்டாடுகிறார்கள். கர்நாடகத்தில் நடைபெறும் மைசூர் தசரா பண்டிகை உலகப்புகழ் பெற்றது. தேவியின் வெற்றியை கொண்டாடும் விழாவாகவே தசரா பண்டிகை திகழ்கிறது.

மைசூர் தசரா பண்டிகையை போன்று தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகில் உள்ள குலசேகரன் பட்டினத்தில் நடைபெறும் தசரா பண்டிகையும் மிகவும் பிரசித்தி பெற்றது. அங்குள்ள முத்தாரம்மன் கோவிலில் இந்த பண்ணடிகையையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் பல்வேறு கடவுளின் வேடங்களை அணிந்த படி வீதி உலாவாக செல்வர்.

நவராத்திரி வரலாறு

ஒரு காலத்தில் மகிஷன் என்ற அசுரன் தேவர்களை கொடுமைப்படுத்தி வந்தான். இது குறித்து மும்மூர்திகளிடம் தேவர்கள் முறையிட்டனர். மகிஷனின் அட்டகாசத்தை முடிவுக்கு கொண்டுசர சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகியோர்முடிவு செய்தனர்.

மும்மூர்த்திகளின் முகங்களில் இருந்து வெளிப்பட்ட ஒளி, நெருப்பைப்போல் வெளிவந்தது. அது ஒரு பெண் வடிவம் கொண்டது. அந்த பெண் துர்க்கா தேவி என அழைக்கப்பட்டார். ஒன்பது நாள் விரதம் இருந்து ஆயுதபூஜை செய்து பத்தாம் நாள் வளையலணிந்த கைகளில் வாள்பிடித்து போய் மகிஷனை கொன்று மகிஷாசுரமர்த்தினியாக திரும்பி வந்தாள்.

தேவி விரதம் இருந்த தினங்களை நவராத்திரி என்கிறார்கள். அசுரனை ஜெயித்த தினம் விஜயதரமி. வடநாட்டில் துர்க்கா பூஜை 9 நாட்கள் சிறப்பாக கொண்டாடப்படும். ஒரு கன்னிப்பெண்ணுக்கு துர்க்கையின் வேடம் அணிவித்து அவரை துர்க்கா தேவியாக வழிபடுவார்கள். நவராத்திரியின் போது வடநாட்டில் ராமரின் லீலைகளை நாடகமாக நடத்துகின்றனர்.

ராமர் பட்டாபிஷேகத்தன்று ராவணனின் உருவத்தை 100 அடி உயரத்தில் காகிதம், மூங்கில் முதலியவற்றால் உருவாக்கி அதில் வெடிகள் வைத்து எரித்து விடுகின்றனர். அதை வாணவேடிக்கையாக பார்த்து மகிழ்கின்றனர்.

நவராத்திரி நாளான ஒன்பது தினங்களிலும் பூஜை செய்து வழிபாடு செய்தால் எல்லாநலன்களையும் அம்பிகை அருளுவாள். தீமைகள் அழிந்து நன்மைகளும், தர்மங்களும் தழைத்தோங்கவேண்டும் என்பதே நவராத்திரியின் குறிக்கோளாகும்.
Area :
Bus Route :
Share |
 
:
Comments  
1suresh kumar KOn 13/10/2010
photos
Title : power electronic
i like the electrical....
 
Sign up for The Second Marriage.com and start searching profiles and get married instantly.

Post Your Comment :
 
 
 
 
 
 
Copyright © 2010 Thiruhalam.com