www.thiruthalam.com - Article
Paadaleeswarar Kovil - Cuddalur
Specialities : General  
x தென்ஆற்காடு மாவட்டத்தில் மிகவும் பழமை வாய்ந்த சிவாலயங்கள் எழுந்தருளிய பகுதியை நடு நாடு என்று அழைப்பர். அந்த நடுநாட்டில் அமைந்துள்ள 22 சிவத்தலங்களுள் மிக முக்கியமான 18வது சிவத்தலம் படலீசுவரர் கோவில் ஆகும். இது கடலூரில் அமைந்துள்ளது.

திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், அருணகிரிநாதர் போன்றோரால் பாடல்பெற்ற தலம் என்பதால் இங்குள்ள இறைவன் பாடலீசுவரர் என்று அழைக்கப்படுகிறார். இத்தல இறைவி தோகை நாயகி, பெரியநாயகி என அழைக்கப்படுகிறார்

கன்னிவளநாதன், கடை ஞாழலுடைய பெருமானடிகள், சிவக்கொழுந்தீசன், பாடலநாதன், கரையேற்றும் பிரர் எனும் வேறு திருப்பெயர்களும் இத்தல இறைவனுக்கு அமைந்துள்ளன.

ஊர், கடை ஞாழல், க்னிவனம், க்னிகாப்பு, பாடலபுரம், ஆதிமாநகர், உத்தாரபுரம், பாதிரிப்பதி, திருப்பாதிரிப்புலியூர், புலிசை என பலப் பெயர்கள் இந்த ஊருக்கு வழங்கப்படுகிறது. இதில் சடைஞாழலூர் என்பதே கடலூர் என ஆனதாகவும் கூறுகிறார்கள்.

பாதிரி மரம் :

இக்கோவிலின் தலவிருட்சம் பாதிரிமரமாகும். இது பன்னிரு வகையான பூக்களை ஒரே காலத்தில் பூத்ததாக புராணங்கள் கூறுகின்றன.இம்மரக்கிளை பட்டதால் முடங்கு கால் முயல் உருவாக சாபம் பெற்றிருந்த மங்கண முனிவரும், உபமந்தியரும் சாப நீக்கம் பெற்றனர் என்பது புராணச் செய்தி.

ஒருசமயம் சிவபெருமானின் அருள்விழிகளை தம்திருக்கரங்களால் மூட, சிவனின் சாபத்திற்கு ஆளானாள் அம்பிகை, அவள் இறைவனிடம் சாப விமோசனம் வேண்ட, 'நீ பூவுலகத்தில் நாம் எழுந்தருளியுள்ள 1008 சிவத்தலங்களையும் தரிசித்து கொண்டு வருங்காலத்தில் எந்த தலத்தில் உன் இடத்தோளும், இடக்கண்ணும் துடிக்கின்றனவோ அத் தலத்தில் தங்கி தவம் மேற்கொண்டால் யாம் அங்கு வந்து உன்னை திருமணம் புரிந்து கொள்வோம்' என்றருளினார்.

ராஜகோபுரம் :

இக்கோவில் ராஜகோபுரம் கம்பீரமாக காட்சியளிக்கிறது. கோபுர வாயில் முன்பு கருங்கல் மணி மண்டபம் உள்ளது, அதன் அருகே சிவ புண்ணியம் மிக்க திருக்குளம் ஒன்றும் உள்ளது. சுற்றுப் பிரகாரங்கள் அழகுடன் காட்சித் தருகின்றன.

63 நாயன்மார்களுக்கும் திரு உருவச்சிலைகள் இங்கு அமைந்துள்ளன. தட்சினாமூர்த்தி, பிள்ளையார், முருகன், துர்க்கை போன்ற கடவுள்களும் சந்நிதி கொண்டு எழுந்தருளியுள்ளனர்

பெரியநாயகியின் சந்நிதி தனியாக உள்ளது. அம்பிகையின் எதரில் நந்தி சிலை அமைந்துள்ளது மிகவும் விசேஷமாகும். முக்கடல் சங்கமிக்கும் குமரியில் கன்னியாக இருந்து நித்தம் தவம் செய்யும் பார்வதி காஞ்சியில் தவம் செய்து ஈசனை அடைந்தது போல, கடல் தவழும் கடலூரில் கன்னியாக அவதரித்து கடுந்தவம் செய்து பரமேஸ்வரனை அடைந்தவேளே உமாமகேஸ்வரி.

பெரிய கோவில் :

திருவாரூரில் பிறப்பதும், சிதம்பரத்ததை தரிசிப்பதும், திருவண்ணாமலையை நினைப்பதும், காசியில் இறப்பதும் முக்தியாக இருப்பினும் இந்த பாடலீசுவரரை வழிபட்டால் அனைத்து நலங்களையும் பெறலாம்.

தஞ்சை பிரகதீஸ்வரர் கோவிலை பெரிய கோவில் என்று அழைப்பது போல் கடலூரின் மையப்பகுதியில் அமைந்துள்ள பாடலீசுவரர் கோவிலையும் பெரிய கோவில் என்றே பன்னெடுங்காலமாக அழைத்து வருகின்றனர்.
Area :
Bus Route :
www.thiruthalam.com